ரசம் இல்லாத விருந்து நிறைவில்லாதது என்பார்கள். அந்த வகையில் உங்கள் வீட்டில் தக்காளியை மிக்ஸியில் அரைத்து செம்ம ருசியா கல்யாண ரசம் வைப்பது எப்படி என்று பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
கல்யாண விருந்துகளில் பெருமாலும் ரசம் இடம் பெறும். ரசம் இல்லாத விருந்து நிறைவில்லாதது என்பார்கள். விருந்தை நிறைவு செய்வது ரசம்தான். வீடுகளிலும் கூட சாப்பிட்டு முடிக்கும்போது இறுதியாக ரசம் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவார்கள். ஆனால், அந்த ரசம் சுவையாக இல்லாவிட்டால், விருந்து திருப்தி இல்லாமல் போய்விடும். அதனால், செம்ம ருசியான கல்யாண ரசம் செய்வது எப்படி என்று பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
வெங்கடேஷ் பட்-டின் ரெசிபி கல்யாண ரசம் செய்வது எப்படி?
ஸ்டவ்வை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து காய வையுங்கள். 4 தக்காளியை புரியை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். அதை கடாயில் ஊற்றுங்கள். அடுத்து, 50 கிராம் புளியை 50 மி.லி தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும் கடாயில் ஊற்றுங்கள். அதில் 20 கிராம் வெல்லத்தைப் போடுங்கள்.
அடுத்து 2 பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போடுங்கள்.
இப்போது இவர்களுடன் கடாயில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றுங்கள். ஒரு 10 நிமிடம் வேக வையுங்கள், தக்காளி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
100 கிராம் துவரம் பருப்பை அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வையுங்கள். இந்த 4 விசிலில் துவரம் பருப்பு நன்றாகக் குழைந்து இருக்கும். அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது வேறொரு அடுப்பில், ஒரு வானலியை வைத்து பற்ற வையுங்கள், அதில் ஒரு 2 டீஸ்பூன் தனியா, 1 டீஸ்பூன் துவரம் பருப்பு, 2 டீஸ்பூன் சீரகம், கஷ்மீரி மிளாகாய் அல்லது காய்ந்த நீட்டு மிளகாய் 5 மிளாயைப் போடுங்கள். எண்ணெய் இல்லாமல் நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். இதன் மீது 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் போடுங்கள். இது சூடு ஆறிய பிறகு, மிக்ஸியில் நன்றாகத் தூளாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது ரசப்பொடி தயார்.
அதே நேரத்தில், கொதித்து வெந்துகொண்டிருக்கும் தக்காளி மற்றும் புளித் தண்ணீர் நன்றாக வெந்த பிறகு, அதில், வேக வைத்த 100 கிராம் துவரம் பருப்பை போடு கலந்துவிடுங்கள். 5 நிமிடம் கொதிக்க வையுங்கள். தண்ணீர் குரைவாக இருந்தால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் ஒரு 4 ஸ்ப்பூன் மஞ்சள் தூள் போடுங்கள்.
கொதி வரும்போது ரசப்பொடியை ஊற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவை என்றால், மிளகு போட்டுக்கொள்ளுங்கள். ரசப்படி போட்டவுடன் உப்பு போடுங்கள். கொதித்து வரும்போது, கொத்தமல்லியை இலையை துண்டுகளாக நறுக்கி போட்டு கலந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, ரசத்தை நெய்யில் தாளிக்க வேண்டும். ஒரு பான் எடுத்து ஸ்டவ்வில் வைத்து காய வையுங்கள், அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் சூடானதும், ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு பொரியவிடுங்கள், அடுத்து ஒரு அரை டீஸ்பூன் சீரகம் போடுங்கள். கொஞ்சம் கறிவேப்பிலை போடுங்கள். கடைசியாக ஒரு சிட்டிகை ஒரு பெருங்காயத் தூள் போட்டு, பிறகு அதை எடுத்து ரசத்தில் ஊற்றி தாளித்துவிடுங்கள். இப்போது, ரொம்ப முக்கியமானது. ஒரு தேங்காய் ஓடு அதாவது ஒரு கொட்டாங்குச்சியை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசத்துக்குள் வைத்து 30-45 நிமிடங்கள் மூடி வைத்துவிடுங்கள்.
ரசத்தைப் பரிமாறுவதற்கு முன்பு அல்லது சாப்பிடுவதற்கு ரசம் ஊற்றுவதற்கு முன்பு இந்த கொட்டாங்குச்சியை வெளியே போட்டுவிடுங்கள். இது ரசத்திற்கு ஒரு நல்ல மனத்தையும் சுவையையும் கொடுக்கும். அவ்வளவுதான் செம்ம ருசியான கல்யாண ரசம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.