உங்க வீட்டில் சுவையான பைனாப்பிள் கேசரி: நெய்- கடலை எண்ணெய் இப்படி கலந்து செய்யணும்!
கேசரியை நம்முடைய வீட்டில் பைனாப்பிள் (அன்னாசிப் பழம்) சேர்த்து டேஸ்டியான முறையில் அதுவும் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
விஷேச நாட்களில் தயார் செய்யும் உணவுகளில் முக்கிய இனிப்பு உணவாக கேசரி இடம் பிடிக்கிறது. இலையில் சாப்பிடும் பாரம்பரியத்தை கொண்ட நாம், முதலில் இனிப்பு ஒன்றை வைப்போம். அந்த இனிப்பு உணவாக பெரும்பாலும் கேசரி இருக்கிறது.
Advertisment
இந்த கேசரியை நம்முடைய வீட்டில் பைனாப்பிள் (அன்னாசிப் பழம்) சேர்த்து டேஸ்டியான முறையில் அதுவும் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப் நெய் மற்றும் கடலை எண்ணெய் - 1 கப் முந்திரி பருப்பு - 1 கைப்பிடி உலர்ந்த திராட்சை - 1 கைப்பிடி குங்கும பூ - ஒரு கிராம் பைனாப்பிள் - 100 கிராம் (பொடியாக நறுக்கிறது) சர்க்கரை - முக்கால் கப் உப்பு - ஒரு சிட்டிகை கொதிக்க வைத்த தண்ணீர் - 2 கப் ஏலக்காய் பொடி - சிறிதளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கடினமாக கடாய் எடுத்து சூடேற்றவும். அதில் நெய் மற்றும் கடலை எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். பிறகு அதில் பாதியளவை எடுத்து அதில் கப்பில் வைத்து விடவும்.
இப்போது, கடாயில் மீதி இருக்கும் நெய் மற்றும் கடலை எண்ணெய்யில் முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து, மிதமான சூட்டில் நன்கு கலந்து வறுத்துக் கொள்ளவும். இவை ஓரளவுக்கு நன்கு வறுத்த பிறகு, அவற்றுடன் ரவை சேர்த்து கலந்து கொள்ளவும். இவற்றை 2 முதல் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். அதனுடன் குங்கும பூ சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பிறகு பைனாப்பிள் சேர்த்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், சர்க்கரை சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும். பிறகு கொதிக்க வைத்த தண்ணீர் சேர்க்கவும். இவற்றை மிதமான சூட்டில் வைத்தே கலந்து கொள்ளவும்.
பிறகு, முன்பு எடுத்து வைத்த நெய் மற்றும் கடலை எண்ணெய் சேர்க்கவும். கடைசியாக ஏலக்காய் பொடி சேர்த்து 3 முதல் 5 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைக்கவும். இப்போது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரவா கேசரி தயார்.