/indian-express-tamil/media/media_files/uYnJh73UV8uArt1yCxrQ.jpg)
செஃப் வெங்கடேஷ் பட் கைவண்ணத்தில் ருசியான வெண்டைக் காய் சாதம் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
சமையல் துறையில் வல்லுநராக வலம் வருபவர் வெங்கடேஷ் பட். இந்த துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட இவர், விஜய் டி.வி-யின் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடுவராக பங்கேற்றார். இதன் மூலம் இவர் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமானார். தற்போது செஃப் வெங்கடேஷ் பட் டாப் குக்கு டூப் குக்கு டி.வி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
ஒரு ரெசிபியை எப்படி எளிதில் செய்து அசத்தலாம் என்பதை மிக நிதனாமாகவும், தெளிவாகவும் சொல்லி விளங்க வைக்கக் கூடியவராகவும் செஃப் வெங்கடேஷ் பட் இருக்கிறார். தனது யூடியூப் சேனல் மூலமாக தான் கற்ற சமையல் கலையை உலகறிச் செய்து வருகிறார். இவரது ரெசிபிகள் அனைத்தும் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில், செஃப் வெங்கடேஷ் பட் கைவண்ணத்தில் ருசியான வெண்டைக் காய் சாதம் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வறுக்க
கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்டைக் காய் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
அரைக்க
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 20 பற்கள்
சீரம் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
வர மிளகாய் - 10
தேங்காய் துருவல் - 1/2 மூடி
தாளிப்பு
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (கீறியது)
கருவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெண்டைக் காயை போட்டு வறுத்து எடுக்கவும். கரண்டியை போட்டு வெண்டைக் காய் வத்தல் போல் வரும் வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெண்டைக் காய் வறுத்த அதே எண்ணெயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பூண்டு, சீரகம், மிளகு, கருவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். மிதமான சூட்டில் வைத்து வதக்கவும்.
அடுப்பை அணைத்த பிறகு அவற்றுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். இவை சூடு ஆறியதும் பேஸ்ட் அல்லது பொடி போல் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும் அதில் கடுகு போட்டு பொரிய விடவும். பிறகு அதில் வேர்க்கடலை, முந்திரி, கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
இதன்பின்னர், இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கிய பின்னர், ஏற்கனவே வறுத்த வைத்த வெண்டைக்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியில் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். அவற்றை நன்கு கலந்து விட்ட பிறகு அதனுடன் ஏற்கனவே வடித்து வைத்துள்ள சாதம் சேர்க்கவும்.
அடுப்பை அணைத்த பிறகு அவற்றை நன்றாக கிளறி கலந்து கொள்ளவும். கடைசியாக உப்பு சேர்த்து கிளறிய பிறகு, பொடியாக நறுக்கி வைத்து கொத்தமல்லி தழையை சேர்த்து கீழே இறக்கினால் ருசியான வெண்டைக் காய் சாதம் ரெடி.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us