அப்பள பூ சம்மந்தி எளிமையான சமையல் வகைகளில் ஒன்றாகும். இது சாதம், இட்லி, தோசை, மற்றும் கஞ்சி போன்ற உணவு வகைகளுக்கு நன்றாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
எண்ணெய் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் உப்பு பெருங்காயத்தூள் துருவிய தேங்காய் புளி வறுத்த அப்பளம் நெய்
செய்முறை:
Advertisment
Advertisements
இதனை செய்ய முதலில், ஒரு கடாயை சூடுபடுத்தி, சுமார் ஒரு ஸ்பூன் பழைய எண்ணெயுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் புதிய எண்ணெயையும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வாட்டி எடுக்கவும். வாட்டிய மிளகாயை தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கறிவேப்பிலை, இஞ்சி, மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இது சம்மந்திக்கு நல்ல நறுமணத்தையும் சுவையையும் சேர்க்கும். அடுத்து, சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், துருவிய தேங்காய், மற்றும் முன்னதாக வறுத்து வைத்திருந்த காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்த பொருட்களுடன் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு புளி மற்றும் வறுத்த அப்பளத்தை உடைத்துச் சேர்க்கவும். அப்பளமானது சம்மந்திக்கு தனித்துவமான சுவையையும், பூ போன்ற மெல்லிய அமைப்பையும் கொடுக்கும்.
இந்த கலவையை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது, அதிக மென்மையாக இல்லாமல், சற்று கடினமாக இருப்பது அவசியம். கடைசியாக, அரைத்த சம்மந்தி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதன் மேலே சூடான நெய்யைச் சேர்த்து நன்கு கலக்கவும். நெய் சேர்ப்பது சம்மந்திக்கு மேலும் சுவையையும் பளபளப்பையும் கொடுக்கும். இந்த பலபலக்கும் அப்பள பூ சம்மந்தியை சூடான சாதத்துடன், இட்லி, தோசை, அல்லது கஞ்சியுடன் சேர்த்து சுவைக்கலாம். இது ஒரு எளிய மற்றும் சத்தான உணவாகும்.