குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உடல் ஆரொக்கியத்திற்கும் தகுந்தார்போல ஒரு ஸ்நாக்ஸ் செய்வது அவசியம். அதற்கு புரதச்சத்து அதிகம் உள்ள ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு மிகவும் ஈஸியாக கடலைப்பருப்பு, அரிசி மாவு வைத்து ஒரு கொழுக்கட்டை செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அதுவும் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
பச்சை மிளகாய்
இஞ்சி
சீரகம்
கொத்தமல்லி தழை
உப்பு
அரிசி மாவு
நெய்
மிளகாய் தூள்
செய்முறை
கடலைப்பருப்பு தேவையான அளவு எடுத்து கழுவி சுத்தம் செய்து ஒரு நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதை மிக்ஸியில் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய்,சீரகம், கொத்தமல்லி தழை, உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் சுடுதண்ணீர் தயாராக வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய், தண்ணீர் ஊற்றி உப்பு, அரிசி மாவு போட்டு மிதமான சூட்டில் அடுப்பை வைத்து கிளற வேண்டும்.
பின்னர் இதை கைகளில் ஒட்டாதவாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்னர் தயார் செய்துள்ள மாவை எடுத்து கொழுக்கட்டை வடிவில் தட்டி உள்ளே அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பை வைத்து வேக வேகவைத்து எடுக்கவும்.
Open Kozhukattai | evenimg snacks | Chef Venkatesh Bhat
இட்லி பாத்திரத்தில் வேக வைக்கலாம். கொழுக்கட்டை மாதிரி வேகவைத்து எடுக்க வேண்டும். பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்ததை தோசை கல்லில் போட்டு மேலே சிறிது மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, நெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவந்து வரும் வரை வறுத்து எடுக்கலாம் சுவையாக இருக்கும்.
இந்த தகவல்கள் செஃப் வெங்கடேஷ் பட் யூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.