டீ, காபி குடிக்கும் போது இந்த ஸ்நாக்ஸ்... குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: வெங்கடேஷ் பட் ரெசிபி
மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும்போது இந்த ஸ்நாக்ஸை செய்து சாப்பிடுவார்கள் அல்லது கடையில் வாங்கி சாப்பிடுவார்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுதான் ஆனியன் பக்கோடா. ஆனியன் பக்கோடா எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் ஆனியன் பக்கோடா செய்வது எப்படி என்று செய்து காட்டியதை சோறு இன் மி (@Soru_n_me) என்ற யூடியூப் சேனலில் செய்து ஷாட்ஸாக வெளியிட்டுள்ளனர்.

Advertisment

ஆனியன் பக்கோடா செய்வது எப்படி?
Advertisment
Advertisements
முதலில் பெரிய வெங்காயத்தை நீளவக்கில் கட் பண்ணி எடுத்துக்கொள்ளுங்கள். இதில் இடித்த பூண்டு கொஞ்சம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இடித்து போடுங்கள். சோம்பு சிறிது அளவு போடுங்கள், தேவையான அளவு உப்பு போடுங்கள். காஷ்மீரி மிளகாய் தூள் 1 டேபிள்ஸ்பூன், 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயம், வனஸ்பதி போட்டு நன்றாக கலந்துவிடுங்கள், 150 கிராம் கடலை மாவு போடுங்கள், 50 கிராம் அரிசி மாவு போடுங்கள், கருவேப்பிலையை அள்ளிப் போடுங்கள், நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள்.
ஸ்டவ்வில் எண்ணெய்யைக் காயவைத்துக்கொள்ளுங்கள். ஸ்டவ்வை மிதமான மெல்லிய தீயில் வைத்துக்கொள்ளுங்கள். உதிரி உதிரியாக வெங்காயத்தை எண்ணெயில் போட்டு, 7-8 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சூப்பரான ஆனியன் பக்கோடா தயார். உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு செய்துகொடுத்துப் பாருங்கள்.