/indian-express-tamil/media/media_files/2025/09/17/venniradai-nirmala-2025-09-17-16-52-22.jpg)
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலா, 1960 மற்றும் 1970-களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தனது 75 வயதை கடந்த பிறகும், அவர் இன்றும் இளமையாகவும், துறுதுறுப்பாகவும் இருக்கிறார். இந்த இளமையின் ரகசியம் என்ன என்று பலருக்கும் கேள்வி எழலாம். இது குறித்து அவர் ஆனந்தவிகடனுக்கு அளித்த நேர்க்காணலில் தனது உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றி பேசியுள்ளார்.
'வெண்ணிற ஆடை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், அதன் பின்னர் தனது பெயருக்கு முன்னால் 'வெண்ணிற ஆடை' என்பதை சேர்த்துக்கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடனக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிர்மலா, தனது இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் நடனமும், கட்டுக்கோப்பான உணவுப் பழக்கங்களுமே காரணம் என்று கூறுகிறார்.
காலை உணவு:அவரது காலை உணவு பெரும்பாலும் எளிமையானதாகவும், அதே சமயம் சத்தானதாகவும் இருக்கும். தினமும் காலையில் கோதுமை கஞ்சி மற்றும் பால் அருந்துவார். சில நேரங்களில், பசி அதிகமாக இருந்தால், நெய் சேர்த்த தோசை சாப்பிடுவார்.
மதிய உணவு: மதிய வேளையில், பெரும்பாலும் தயிர் சாதம் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவார். இது அவருக்கு ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும் தருவதாகக் கூறுகிறார்.
மாலை நேர சிற்றுண்டி: மாலை நேரத்திலும் பால் அருந்துவார். மேலும், எளிதில் ஜீரணமாகக்கூடிய பிரெட் போன்ற லேசான உணவுகளை எடுத்துக்கொள்வார்.
இரவு உணவு: இரவு உணவிற்குச் சாதம் சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு முறை, நடன நிகழ்ச்சிகள் நடந்த சமயத்தில் இரவில் அரிசி உணவு வேண்டாம் என்று கூறப்பட்டபோது, அவர் இட்லி அல்லது தோசை மட்டுமே சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஆனால் அவருக்கு இரவில் தயிர் சாதம் மட்டுமே வேண்டும் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
அளவோடு சாப்பிட்டால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் கூறும் இந்த எளிய உணவு முறையே, அவரது இளமைக்கான ரகசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us