காலை உணவுக்கு அனைவருக்கும் பிடித்த சுவையான வெண் பொங்கல் அதற்கு ஏற்ற ஒரு சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம். மிகவும் எளிமையாக காலையில் சட்டென்று செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
பச்சைப்பருப்பு
பச்சரிசி
நெய்
உப்பு
மிளகு
சீரகம்
இஞ்சி
முந்திரி பருப்பு
கட்டி பெருங்காயம்
கருவேப்பிலை
செய்முறை
பச்சைப் பருப்பு மற்றும் பச்சரிசி இரண்டையும் நன்கு கழுவி சிறிது உப்பு போட்டு குக்கரில் சேர்த்து வேகவிடவும். நன்கு குழைய வேக விட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி அதில் சிறிது மிளகு, சீரகம் நறுக்கிய இஞ்சி, முந்திரி பருப்பை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இது கட்டி பெருங்காயத்தை சுடுத்தண்ணீர் ஊற்றிவிட்டு கரைத்து அதில் சேர்க்கவும். இந்த தாளிப்பில் கருவேப்பிலை சேர்த்து வதக்கி வேக வைத்துள்ள அரிசியில் கொட்டி கலந்து விட்டால் போதும் சுவையான வெண் பொங்கல் ரெடி ஆகிவிடும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு
கொத்தமல்லி
காய்ந்த மிளகாய்
வெந்தயம்
கடுகு
கருவேப்பிலை
சின்ன வெங்காயம்
தக்காளி
கத்தரிக்காய்
புளி கரைசல்
வெல்லம்
பாசிப்பருப்பு
செய்முறை
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், வெந்தயம் இவை அனைத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும்.
சிறிது சேர்த்து கலந்து வேறொரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைத்து அரைக்கவும். பின்னர் அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
அதில் நறுக்கிய தக்காளி, கத்தரிக்காய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். அதில் புளி கரைசல் சிறிது ஊற்றி சிறிது வெல்லம் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் வறுத்து வைத்துள்ள பொடியை பவுடர் ஆக்கி அதில் சேர்க்கவும். இதில் வேகவைத்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து கலந்து விட்டு வேகவைத்து இறக்கவும்.