vetrilai rasam recipe in tamil: சுவையான தென்னிந்திய ரசத்தின் வெவ்வேறு சமையல் குறிப்புகளை நீங்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால் வெற்றிலை ரசத்தை நீங்கள் இன்னும் முயற்சித்துதிருக்க வாய்ப்பில்லை. அவ்வகையில், உணவு குறித்து பதிவுகளை பகிர்ந்து வரும் சௌமியா ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெற்றிலை ரசத்தின் செய்முறையைப் பகிர்ந்து கொண்டார். மிகவும் சிம்பிளான ஒன்றுதான்.
அந்த பதிவில் அவர், “வெற்றிலை அல்லது வெத்தலை ரசம் மிகவும் மருத்துவ குணம் கொண்டது மற்றும் சுவையும் கூட. சளி / இருமல் மற்றும் செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, ”என்று குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிலை ரசம் செய்வது எப்படி?

வெற்றிலை ரசம் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:
4 – வெற்றிலை
2 – தக்காளி
புளி, சிறிய எலுமிச்சை அளவு
10 – பூண்டு பல்
¾ டீஸ்பூன் – சீரகம்
1 டீஸ்பூன் – மிளகு
1 – பச்சை மிளகாய்
2 – காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
1 டீஸ்பூன் – பெருங்காயம்
1 டீஸ்பூன் – கடுகு விதைகள்
½ தேக்கரண்டி – வெந்தய விதைகள்
உப்பு
தாளிக்க நெய்
வெற்றிலை ரசம் சிம்பிள் செய்முறை:-
முதலில் சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டுப் பற்களுடன் வெற்றிலையை மிக்ஸியில் சேர்க்கவும்.
பிறகு நொறுநொறுப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து, தக்காளியைச் சேர்த்து, கலவையுடன் கலக்கவும்.
பின்னர், ஒரு வாணலியில் நெய், பெருங்காயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
அது பொரிந்ததும், புளி தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
தொடர்ந்து வெற்றிலை அரைத்த கலவையை சேர்க்கவும். குமிழ்கள் தோன்றும் வரை கொதிக்க விடவும்.
இப்போது கீழே இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த சுவையான வெற்றிலை ரசம் தயார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil