த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் ஏற்பாடு செய்திருந்த பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில், ஸ்பெஷலாக செய்யப்பட்ட வெற்றிலைப் பாயசத்தை விஜய் விரும்பி சாப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் த.வெ.க தலைவர் விஜய் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிவருகிறார். இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதில் புதிய வகையான உணவுப் பொருட்கள் சில இடம்பெற்றிருந்தன. குறிப்பாக அனைவருக்கும் வழங்கப்பட்ட வெற்றிலைப் பாயசம் விஜய்க்கு மிகவும் பிடித்துப் போய் விரும்பி சாப்பிட்டார் என்று சமையல் பொறுப்பை ஏற்றிருந்தவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிய விருந்தில், மலாய் சான்விச் ஸ்வீட், ஆக்ராபான் ஸ்வீட், இஞ்சிப் புளித் துவையல், மாங்காய் ஊறுகாய், அவரைக்காய் மல்லாட்டை பொரியல், உருளைக்கிழங்கு பட்டாணி காரக்கறி, அவியல், கூட்டு, வெங்காயம் மல்லாட்டை பகோடா, பருப்புப் பொடி சாதம், விஜிடபுள் பிரியாணி, எண்ணெய்க் கத்திரிக்காய் வத்தக் குழம்பு, மாங்காய் மற்றும் முருங்கைக்காய் போட்டு சாம்பார், தக்காளி ரசம், வெங்காய வடை, அப்பளம், வெற்றிலை பாயசம், மோர் பல வகை உணவுகள் புதுச்சேரியில் இருந்து வந்து சமைத்த சமையல் குழுவினரால் செய்யப்பட்டிருந்தது.
/indian-express-tamil/media/media_files/OKx7i5LSqvDBGUgLfDlQ.jpg)
இதில் விஜய்க்கு பிடித்த புதிய வகையான வெற்றிலைப் பாயசம் எப்படி செய்ய வேண்டும் என்றால், அதிலும் ஆயிரம் பேருக்கு செய்ய வேண்டும் என்றால், ஒரு கிலோ பாதம் பிசினியை ஊற வைக்க வேண்டும். அதனுடன் பாதம், முந்திரி, பிஸ்தா இவை மூன்றையும் அரைத்து 100 லிட்டர் பாலில் அதைக் கலக்க வேண்டும். அத்துடன் 10 கவுளி வெற்றிலையை அப்படியே அரைத்து அதன் சாற்றை எடுத்து இதில் கலந்துவிட வேண்டும். அதன்பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய், உப்பு எல்லாம் தேவையான அளவு போடவேண்டும். இந்தக் கலவையை அப்படியே வைத்து அடுப்பில் நன்றாகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். பதமாக காய்ச்சி முடித்தா அதுதான் வெற்றிலைப் பாயசம்.
வெற்றிலைப் பாயசம் நன்றாக ஆறிய பிறகு அதை ஜில் என்று ஐஸ்-ல் வைத்துக் குளிரவைக்க வேண்டும். அப்படிக் குடித்தால் சுவைக் கூடுதலாகக் கிடைக்கும். விஜய் இந்த வெற்றிலைப் பாயசத்தைதான் விரும்பி சாப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“