விஜய் டிவி மகாநதி சீரியலில் காவேரி விஜயிடம் கேட்ட மாங்காய் ரசம் உங்கள் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம். சக்கரசாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
மிளகு சீரகம் சின்ன வெங்காயம் பச்சை மாங்காய் பூண்டு பச்சை மிளகாய் கருவேப்பிலை துவரம் பருப்பு மஞ்சள் பொடி உப்பு எண்ணெய் கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் கொத்தமல்லி
செய்முறை:
Advertisment
Advertisements
மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பச்சை மாங்காய், பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றரை பாதியமாக இடித்துக்கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் துவரம் பருப்பு, ஒரு மாங்காய், மஞ்சள் பொடி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வரை வேக வைக்கவும். மாங்காயின் தோல் எல்லாம் எடுத்துவிட்டு, பருப்பு மற்றும் மாங்காயை நன்றாக மசித்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். இடித்து வைத்த மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். மசித்த பருப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நுரைத்து வரும் போது அடுப்பை அணைக்கவும். ரசம் கொதிக்கக் கூடாது.