தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இதன்பிறகு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற கட்சியின் பாடலையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, அதே மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டை நடத்தினார்.
இந்த மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இதேபோல், கடந்த டிசம்பரில் சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொண்டார். மாநாட்டிற்கு பிறகு அவர் ஏறிய முதல் பொதுமேடை அதுவாக இருந்தது. அந்த விழாவில் அவர் பேசியதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியதன் எதிரொலியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் த.வெ.க-வில் இணைந்த நிலையில், அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விஜய்யின் த.வெ.க அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார். இதனிடையே, த.வெ.க நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 26-ல் நடந்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது
இந்நிலையில், த.வெ.க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள 2,500 பேருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதிய உணவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ள உணவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவை வருமாறு:--
த.வெ.க பொதுக்குழு கூட்ட மதிய உணவு மெனு
1. மால்புவா ஸ்வீட்
2. வெஜ் சூப்
3. ஊறுகாய்
4. இஞ்சி துவையல்
5. தயிர் பச்சடி
6. சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா
7. வெஜ் மட்டன் பிரியாணி
8. சாதம்
9. சைவ மீன் குழம்பு
10. சாம்பார்
11. மிளகு ரசம்
12. இறால் 65
13. அவியல்
14. ஆனியன் மணிலா
15. பக்கோடா
16. உருளை பட்டானி வறுவல்
17. தயிர் வடை
18. அப்பளம்
19. வெற்றிலை பாயாசம்
20. மோர்
21. ஐஸ்கிரீம்.