விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதூர்த்தி என்றாலே பிள்ளையாருக்கும் நமக்கும் பிடித்தமான பூரணம் கொழுக்கட்டைதான் நினைவுக்கு வரும். விநாயகர் சதூர்த்தி நாளில், அனைவரின் வீடுகளிலும் அரசி மாவில் பூரணம் கொழுக்கட்டையை தவறாமல் செய்வார்கள்.
பிள்ளையாருக்கு பூரணம் கொழுக்கட்டைதான் உகந்த உணவாக படையல் செய்கிறார்கள். அதே போல, விநாயகர் சதூர்த்தி அன்று சுண்டலும் படைக்கப்படுகிறது. கொழுக்கட்டை செய்வது என்பது ஒரு கலை.
விநாயகர் சதூர்த்தி என்றாலே விநாயகருடன் நினைவுக்கு வரும் கொழுக்கட்டை மிகவும் சுவையானது. அதிலும், பூரணம் வைத்த கொழுக்கட்டை என்றால் எல்லோருக்கும் பிடித்தமானது. ஆனால், கொழுக்கட்டையை பதமாக முறையாக செய்யாவிட்டால், சாப்பிடவே பிடிக்காமல் போய்விடும். அதனால், இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்திக்கு சுவையான இனிப்பான கொழுக்கட்டையை பதமாக பக்குவமாக செய்வது எப்படி என்ற தகவலை உங்களுக்காக இங்கே தருகிறோம்.
விநாயகர் சதூர்த்திக்கு நீங்கள் வழக்கமாக செய்யும் முறைப்படி பூரணம் கொழுக்கட்டை செய்யாமல், இந்த முறை சற்று வித்தியாசமாக இங்கே கூறப்படும் முறையில் இந்த ஒரு பொருளை சேர்த்து செய்து பாருங்கள். கொழுக்கட்டை தேவாமிர்தமாக செம சுவையாகவும் இனிப்பாகவும் இருக்கும்.
கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன் பூரணம் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். -
பூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
தேங்காய் -1 கப் அளவு
வெல்லம் -1 கப் அளவு
நெய் 1 டீஸ்புன்
செய்முறை:
முதலில் வானலியை எடுத்து அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர், தேங்காய் உடன் வெல்லம் சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
அதை 5 முதல் 10 நிமிடங்களுக்கு நல்ல கெட்டி பதம் வரும் வரை கிளறி கொண்டே இருங்கள். பிறகு, அடுப்பை அணைத்து விட்டு ஆற வைத்தால் பூரணம் தயார்.
அடுத்தது பூரணத்தை உள்ளே வைப்பதற்கு கொழுக்கட்டை மாவு தயார் செய்ய வேண்டும்.
- முதலில் கொழுக்கட்டை செய்வதற்கான பச்சரிசி மாவை நைசாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். கொழுக்கட்டை செய்வதற்கு என தனியாக கொழுக்கட்டை மாவும் கடைகளில் கிடைக்கிறது. பின்னர், பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
- பின்னர், அகலமான பாத்திரத்தை எடுத்து நைசாக அரைத்த பச்சரிசி மாவை போட்டு சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு கரண்டியை வைத்து மாவை நன்றாக கலந்து விடுங்கள்.
- கொழுக்கட்டை மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உங்கள் கையை வைத்து மாவை நன்றாக பிசைந்து, (சப்பாத்தி மாவு பிசைவதை போன்று) சிறு உருண்டையாக எடுத்து கொள்ளுங்கள்.
- பிறகு, பிசைந்த மாவின் மேலே கொஞ்சமாக நெய்யை தடவி, ஒரு மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே மூடி வையுங்கள். பின்னர், கொழுக்கட்டை பிடிப்பதற்கு மாவு தயாராக இருக்கும். அந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர், உருடையாக பிடித்த மாவை தட்டையாக தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைத்து உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் கொழுக்கட்டையை செய்து இட்லி தட்டில் வைத்து மூடி விடுங்கள். கொழுக்கட்டையை 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான இனிப்பான கொழுக்கட்டை தயார். பிள்ளையாருக்கும் மட்டுமல்ல உங்களுக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் இந்த கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.