வீடு ஓரங்களில் வயல்வெளிகளில் தரைகளில் வளர்ந்து இருக்கும் நீல நிற பூ நரம்புகளுக்கு சக்தி கொடுப்பதோடு மட்டுமின்றி ஞாபக மறதியை போக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். மேலும் இந்த பூவை வைத்து டி செய்வது எப்படி என்றும் அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அதைப்பற்றி பார்ப்போம்.
Advertisment
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று அல்சைமர் இதை தடுக்கும் அற்புதமான மூலிகை செடிகளில் ஒன்று தான் விஷ்ணுகிராந்தி ஆகும்.
பல் வலி, தலைமுடி ஆரோக்கியம், அல்சர், தொண்டர் பிரச்சனை போன்றவற்றை குணமாக்க உதவும். மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் நரம்பு தளர்ச்சி, ஞாபகம் மறதி போன்றவற்றையும் குணமாக்கும் சக்தி இந்த விஷ்ணுகிராந்தி பூவிற்கு உள்ளதாக கூறுகிறார்.
இந்த விஷ்ணுகிராந்தி பூ வைத்து டீ எப்படி செய்வது என்று பார்ப்போம். இதன் பூக்கள் சிறிதாக இருக்கும் இதை தரைகளில் படர்ந்து வளரும்.
Advertisment
Advertisements
செய்முறை: இந்த செடிகளை வேரோடு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த செடிகளை போட்டு கொதிக்க விடவும். பின்னர் தண்ணீர் நிறம் மாறியதும் வடிகட்டி எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
காலை மாலை வேளைகளில் எப்போதும் போல டீ மாதிரி இதனை எடுத்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.