நாம் வீட்டில் செய்யும் தயிர் மற்றும் யோகட் இரண்டுமே வெவ்வேறான ஒன்றுதான். வீட்டில் நாம் பாலில் தயிர் ஊற்றியோ அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து புளிக்க வைப்போம். இதனால் இது இயற்கையான சூழலில் உருவாகிறது.
ஆனால் யோகர்ட், செயற்கையான சூழலில், புளிக்கவைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. வீட்டில் தயாரிக்கும் தயிரில் இருக்கும் பாக்ட்டீரியா தினமும் வெவ்வேறு அளவில் இருக்கும்.
இந்நிலையில் யோகர்ட்டில், நல்ல பாக்ட்டீரியா அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. லாக்டிக் ஆசிட் பாக்ட்டீரியா மற்றும் காசியன் நடைபெறும் ரசாயன மாற்றத்தால், யோகர்ட் உருவாகிறது. யோகர்ட்டில் புரோபையாடிக் மற்றும் நல்ல பாக்டீரியா இருக்கிறது.
இதனால் யோகட் சாப்பிடும்போது, ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற நஞ்சை வெளியேற்றும். இந்நிலையில் வீட்டில் தயாரிக்கும் தயிரில், தேவையான அளவில் நல்ல பாக்ட்டீரியா இருக்காது. இருக்கும் குறைந்த பாக்ட்டீரியாவும் நமது குடலுக்கு சென்று உயிரோடு இருக்க இயலாது.
புரோபயாடிக் யோகர்ட்டில், புரத சத்து அதிகமாக இருக்கிறது. கால்சியம், வைட்டமின் பி12, ரிபோபிலாவின், பாஸ்பரஸ், மெக்னீஷியம் இருக்கிறது. கால்சியம், நமது உடலில் கார்டிசோல் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசோல்தான் உடல் எடையை அதிகரிக்கும்.
தயிர் அல்லது யோகர்ட்டை சாப்பிட்டாலே, சளி மற்றும் இருமல் ஏற்படும் என்று கூறுவதில் உண்மையில்லை. தயிர், ஜீரணிக்கும் சுரப்பியாக கூட செயல்படுகிறது.
குடல் ஆரோக்கியத்தை அதிகமாக்கும் மேலும் அல்சர் பிரச்சனைகளுக்கு உதவும்.