குளிர் காலங்களில் உடலுக்கு சில சத்துக்கள் தேவை. குறிப்பாக குளிர் காலங்களில் வயதானவர்களுக்கு உடல் வலி மற்றும் மூட்டு வளி ஏற்படும்.
இரும்பு சத்து
இதனால் இரும்பு சத்து தேவைப்படும். இதனால் ஆரோக்கியமான சருமம், தலை முடி, மனித செல்கள் வளரவும் உதவும்.
தேன், சிவப்பு மீட், பச்சை காய்களிகள், உலர் பழங்கள், வெல்லம், பீட்ரூட், கீரை, புரோக்கோலி, மாதுளை பழத்தில் இரும்பு சத்து உள்ளது.

கால்சியம்
காலிசியம் குழந்தைகள் வளர்வதற்கு உதவுகிறது. எலும்புக்கு மட்டுமல்லாமல், இதயத்தின் தசைகளுக்கும் கால்சியம் தேவைப்படும். .இந்நிலையில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஒன்று சேர்ந்தால், அது புற்றுநோயை கூட தடுக்கும் என்று கூறப்படுகிறது.
பச்சை காய்கறிகள், பால், பால் பொருட்கள், டிரை ஃபுரூட்ஸ், சோயா
சிங்க்
இந்த சத்தில் 300 வகை என்சைம்கள் இருக்கிறது. இது உடலை காயத்திலிருந்து சரி செய்து கொள்வது முதல் குழந்தைகள் வளரும் உதவும். மேலும் பெரியவர்கள் குழந்தைகள் உருவாக்க உதவுகிறது.
முட்டை, மாமிசம், சிப்பி, கடல் உணவுகள், டோஃபு, கருப்பு பட்டாணி, கோதுமை
வைட்டமின் சி
இதுதான் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் முக்கிய குணம் கொண்டது. சளி மற்றும் இருமல் வராமல் தடுக்க உதவும் சத்து. வைட்டமின் சி சத்தை பெற வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை ஊற்றி குடித்தால் போதுமானது.
கேரட், பீட்ரூட், எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா பழம், தக்காளி, கிவி பழத்தில் வைட்டமின் சி உள்ளது.