கேட்பதற்கு புதிதாக இருந்தாலும், வால்நட் எண்ணெய் தற்போது எல்லா நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இந்த எண்ணெய்யில் ஓமேகா 3 பேட்டி ஆசிட், ஆன்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்ஸ் இருக்கிறது.
இந்நிலையில் நீங்கள் சமயலுக்கு பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஓமேகா-3- பேட்டி ஆசிட். இதனால் இதய நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் எல்.டி.எல் அதாவது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
இந்த ஓமேகா -3- பேட்டி ஆசிட் மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. நமது மூளை யோசித்து செயலாற்றும் தன்மையை ஊக்குவிக்கிறது.
மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்த இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் இ இருக்கிறது. இது நமது சருமத்திற்கு தேவையான வைட்டமின்ஸ் தருகிறது. மேலும் சருமத்தின் சுருங்கி விரியும் தன்மையை பாதுகாக்கிறது. மேலும் எக்சிமா போன்ற தோல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் இது வழக்கமான சமைக்கும் எண்ணெய்யை போல் இல்லாமல். ஆரோக்கியமான சத்துக்களை தருவதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இந்நிலையில் நாம் சாப்பிடும் சாலடில் இதை சேர்த்து சாப்பிலாம். மேலும் பிரட், கேக், குக்கீஸ் போன்ற விஷயங்களை செய்யும்போது ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக இதை சேர்க்கலாம்.