எண்ணெய் குடிக்காத பூரி வேணுமா? சூடான எண்ணெயில் ஒரு ஸ்பூன் இதை மட்டும் சேருங்க!
காலை டிபன் என்றாலே நம் நினைவிற்கு வருவது இட்லி, தோசைக்கு அடுத்து வருவது பூரி. பூரி அனைவருக்கும் பிடித்த காலை உணவு. இந்தப் பதிவில் எண்ணெய் அதிகளவில் குடிக்காத பூரி எப்படி செய்வது எப்படி? என்று காண்போம்.

நம் வீட்டில எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சு சாப்பிடுற ஒரு சுவையான உணவு பூரி. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பூரி, மொறுமொறுப்பா எண்ணையில பொறிக்கப்பட்டு, உருளைக்கிழங்கு மசாலா, சுண்டல் மசாலா (அ) சட்னி சேர்ந்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இத செய்யுறது ரொம்ப சுலபம், ஆனால் பூரியில் அதிகளவு எண்ணெய் பிடித்துவிடும் என்ற கவலை இல்லத் தரசிகளுக்கு இருக்கும். இந்தப் பதிவில் அதிகளவில் குடிக்காத பூரி எப்படி செய்வது எப்படி? என்று காண்போம்.
Advertisment
பூரி செய்யத் தேவையானப் பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
சீனி - தேவைக்கேற்ப
எண்ணெய் – பூரி சுட போதுமான அளவு
தண்ணீர் – மாவு பிசைய
மாவு பிசைதல்:
Advertisment
Advertisements
முதலில், கோதுமை மாவு தேவையான அளவு உப்பு மற்றும் வெள்ள சர்க்கரை ஒரு பாத்திரத்தில சேர்த்துக்கோங்க. மெல்ல மெல்ல தண்ணீர் சேர்த்து, கையால நன்றா பிசையுங்க. மாவு ரொம்ப கெட்டியா இருக்காம, மிருதுவா இருக்கணும். பிசைந்த மாவ சிறு உருண்டைகளா பிரிச்சுக்கோங்க. ஒவ்வொரு உருண்டையையும், சிறிய பூரியா உருட்டுங்க. மெல்லியதா இருக்கக் கூடாது, சற்று தடிமனா இருக்கணும். கடாயில எண்ணெய் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக சூடாக்குங்க. உருட்டிய பூரிகளை எண்ணெயில போட்டு, இரு பக்கமும் மொறுமொறுப்பா பொரிக்கணும். இப்படி செய்வதால், பூரியில் எண்ணெய் அதிகளவில் பிடிக்காது.