இதுவரை யாருமே ட்ரை பண்ணாத நீர் தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். கருகிவிடும் புளித்த மாவு கிழிந்த தோசை போன்ற எந்தவிதமான பயமும் வேண்டாம் இந்த நீர் தோசை செய்வதற்கு. ஏனென்றால் இந்த தோசை கருகாமல் வெள்ளை நிறத்தில் சுடலாம்.
அப்படிப்பட்ட நீர் தோசையை ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் எப்படி செய்வது என்று கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
உப்பு
எண்ணெய்
தண்ணீர்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.
நீர் தோசை | Neer Dosai Recipe in Tamil
அரைத்த பின்பு தண்ணீர் சேர்த்து மோர் பதத்தில் வரும் வரை கரைக்க வேண்டும். அடுத்து ஒரு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு கரைத்த மாவை ஊற்றி ஒரு நிமிடம் மூடிபோட்டு வேகவைக்கவும்.
இப்படி செய்தால் போதும் எளிமையான மற்றும் மிருதுவான நீர் தோசை தயாராகிவிடும். எத்தனையோ வகை தோசை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் நீரில் செய்த நீர் தோசை சாப்பிட்டு இருக்கிறீர்களா? இனி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாரத்தில் இரண்டு முறையாவது இதை செய்து கொடுங்கள் அசந்து விடுவார்கள்.
குறிப்பாக மாவு இல்லாத நேரத்தில் இது மிகவும் உபயோகமாக இருக்கும். குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மாதிரி கூட செய்து கொடுக்கலாம். காயாமல் சாஃப்டாக இருக்கும்.