scorecardresearch

வெயில் காலத்தில் தர்பூசணி: சுகர் பேஷண்ட்ஸ் சாப்பிடலாமா?

தண்ணீர் பூசணி, ஸ்டாபெரியில் இயற்கையாக 92% தண்ணீர் சத்து இருக்கிறது. ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாச்சிபழம், புளூ பெரிஸ், மஸ்க் மெலன் ஆகியவையில், 85 % முதல் 88 % வரை தண்ணீர் சத்து இருக்கிறது. இந்நிலையில் இந்த பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானது. குறிப்பாக இதன் கிளைசிமிக் லோட் குறைவாக இருக்கிறது.

தண்ணீர் பூசணி

தர்பூசணி, ஸ்டாபெரியில் இயற்கையாக 92% தண்ணீர் சத்து இருக்கிறது. ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாச்சிபழம், புளூ பெரிஸ், மஸ்க் மெலன் ஆகியவையில், 85 % முதல் 88 % வரை தண்ணீர் சத்து இருக்கிறது. இந்நிலையில் இந்த பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானது. குறிப்பாக இதன் கிளைசிமிக் லோட் குறைவாக இருக்கிறது.

இந்த முறை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. வழக்கத்தைவிட 2 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த வெயில் காலத்தில் வரட்சி ஏற்படும். அதிகமாக வேர்வை வெளியேறும். நாம் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால் மயக்கம், தலைச்சுற்றல், அஜீரண கோளாறு ஏற்படும். இந்நிலையில் வெயில் காலத்தை சமாளிக்க வெறும் தண்ணீர் மட்டும் பத்தாது,

இந்நிலையில் தண்ணீர் சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும். தண்ணீர்ப் பூசணி, நொங்கு, பீச், வெள்ளரிக்காய், தக்காளி, சிலேரி, லெட்யூஸ் ஆகியவற்றை நாம் சாப்பிடலாம். முடிந்த வரை இதை நாம் பச்சையாகவே சாப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இல்லை என்றால் தண்ணீருடன், டீ, எலுமிச்சை சாறு, இளநீருடன் கலந்து சாப்பிடலாம்.

இந்நிலையில் இதில் உள்ள வைட்டமின் சி,  வைட்டமின் பி காம்பிளக்ஸ், ஆகியவை நல்ல ஆரோக்கியமான சருமத்தை பெற உதவுகிறது. மேலும் விக்கத்தை குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம். குறிப்பாக தர்பூசணி, பெரிஸ் ஆகியவற்றை சாப்பிடலாம். 100 கிராம் தர்பூசணியில். கிளிசைமிக் இண்டக்ஸ் 72 உள்ளது. ஆனால் இதில் உள்ள கிளைசிமிக் லோட் 2 என்ற அளவில் இருக்கிறது. ஜூஸாக குடித்தால், இதில் உள்ள கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே உடல் எடுத்துக்கொள்ளும். இந்நிலையில் நாம் அப்படியே  தண்ணீர் பூசணியை சாப்பிட்டால், இதில் இருக்கும் நார்சத்து, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்காது.

இந்நிலையில் புரொக்கோலி, லெட்யூஸ், கீரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை நாம் சாப்பிட்டால் அதிக நார்சத்து மற்றும் தண்ணீர் சத்து உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Watermelon good for diabetes other fruits and vegetable in summer