ஸ்பைஸி சமையல்ஸ் (@SpicySamayals) என்ற யூடியூப் சேனலில் வித்தியாசமாக தர்பூசணி அல்வா செய்து காட்டியுள்ளனர்.
தர்பூசணி சீசனில் உங்கள் வீட்டில் தர்பூசணி பழம் இருக்கிறது என்றால் இந்த மாடிரி தர்பூசணி அல்வா செய்து பாருங்கள், செம்மையா இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.
Advertisment
கோடைக் காலம் என்றாலே வெயிலுக்கு இதமான தர்பூசணி பலருக்கும் கண் முன்னால் வரும். அதனால், ஸ்பைஸி சமையல்ஸ் (@SpicySamayals) என்ற யூடியூப் சேனலில் வித்தியாசமாக தர்பூசணி அல்வா செய்து காட்டியுள்ளனர்.
வெள்ளை பூசணி அல்வா கேள்விப் பட்டிருப்பீர்கள், தர்பூசணி அல்வா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், தர்பூசணி அல்வா எப்படி இருக்கிறது என்று செய்து பாருங்கள்.
தர்பூசணி அல்வா செய்முறை:
Advertisment
Advertisements
தர்பூசணி பழத்தை சாப்பிட்டுவிடுங்கள், தர்பூசணி தோலைத் தூக்கி எரியாதீர்கள், தர்பூசணி தோலை எடுத்து மேல்பகுதியை சீவி விடுங்கள். பிறகு, கேரட்டை பொடியாகத் துருவுவது போல, பொடியாகத் துருவி, அதை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் போட்டு பிழிந்து சாறு தணியாகவும் தர்பூசணி துருவலையும் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்றை வையுங்கள், அதில் ஒரு பான் வைத்து, கொஞ்சம் நெய் ஊற்றி ஒரு கைப்பிடி அளவு முந்திரி பருப்பு போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, பானில் கொஞ்சம் நெய் விட்டு தர்பூசணியைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள், அடுத்து தர்பூசணியைப் பிழிந்து வைத்துள்ள தண்ணீரை ஊற்றி வேக வையுங்கள், தண்ணீர் வற்றிய பிறகு, அரை கப் அளவு சர்க்கரை சேர்த்து கலக்குங்கள், சர்க்கரை கரைந்ததும், அரை எலுமிச்சையை பிழிந்துவிடுங்கள். அடுத்து, ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். திக் ஆனதும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு கிளறிவிடுங்கள். அவ்வளவுதான், செம்ம டேஸ்டியான தர்பூசணி அல்வா தயார். உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.