சுவையான தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
நறுக்கிய தர்பூசணி – 3 கப்
கெட்டியான பால் – 2 கப்
சர்க்கரை – முக்கால் கப் வரை
ஃப்ரெஷ் க்ரீம் – 150 கிராம்
ரோஸ் எசென்ஸ் – கால் டீஸ்பூன்
செய்முறை
நன்கு சுண்டக் காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். இத்துடன் பொடித்த தர்பூசணியை சேர்த்து மிக்ஸியில் ஒருஅடி அடிக்கவும்.
இத்துடன் ப்ரெஷ் க்ரீம் மற்றும் எசென்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையை ஒரு அலுமினிய பாக்ஸில் நிரப்பி ஃப்ரீஸரில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து எடுத்து மீண்டும் ப்ரீஜில் செய்யவும். இது நல்ல ஐஸ் க்ரீமாக செட் ஆனதும் எடுத்து பொடித்த தர்பூசணியைக் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“