தர்பூசணி சாப்பிட்டு விட்டு வேண்டாம் என தூக்கிப் போடும் தோலை வைத்து சுவையான பருப்பு கூட்டு எப்படி செய்வது என்று வி எஸ் என் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தர்பூசணி தோல் பருப்பு வெங்காயம் மஞ்சள் தூள் உப்பு பெருங்காயத்தூள் தக்காளி வரமிளகாய் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தேங்காய் துருவல் எண்ணெய் கொத்தமல்லிதழை
செய்முறை
Advertisment
Advertisements
தர்பூசணி தோல் எடுத்து சீவி அந்த வெள்ளைப் பகுதியை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். பின்னர் ஒரு குக்கரில் பருப்பு, தர்பூசணி, வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், தக்காளி சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை, துருவிய தேங்காய் மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு மேலே கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கினால் சுவையான தர்பூசணி பருப்பு கூட்டு ரெடி ஆகிவிடும்.