இந்திய இனிப்பு வகைகளில் அல்வாவுக்கு ஒரு தனி இடம் உண்டு. நெய் மணக்க மணக்க, நாவில் கரையும் அல்வாவை சுவைக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில், மிக எளிமையாகவும், சுலபமாகவும் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை தான் பிரட் அல்வா. வீடுகளில் பண்டிகை காலங்களில் அல்லது விருந்தினர்கள் வரும்போது இதைச் செய்து அசத்தலாம். அதன்படி, பாய் வீட்டு கல்யாண ஸ்டைலில் சுவையான பிரட் அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டு,
நெய்,
எண்ணெய்,
முந்திரி பருப்பு,
சர்க்கரை,
ஏலக்காய் மற்றும்
பால்.
செய்முறை:
முதலில் 8 பிரட் துண்டுகளை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இனி, அடுப்பில் கடாய் வைத்து அதில், இந்த பிரட் துண்டுகளை பொந்நிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளலாம். இனி, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும்.
இதில் 10 முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கலாம். அதே கடாயில், ஒரு கப் தண்ணீர், சர்க்கரை, இரண்டு ஏலக்காய் சேர்த்து கலக்க வேண்டும். தண்ணீரில் சர்க்கரை நன்கு கரைந்து கொதித்ததும், பொறித்து வைத்த பிரட் துண்டுகளை சேர்க்கவும்.
இவற்றுடன் ஒரு கப் பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் சிறிது நெய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான பிரட் அல்வா தயாராகி விடும்.
இதனை விசேஷ தினங்களில் செய்து கொடுத்தால் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.