சுவையான கல்யாண வீட்டு ஸ்டைலில் வாழைக்காய் ப்ரை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
வாழைக் காய் – 2
பொரிக் கடலை – 2 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
சோம்பு – ஒன்றரை ஸ்பூன்
சிகப்பு மிளகாய்- 10
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாழைக்காயின் தோலை சீவியபின் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 1 ஸ்பூன் சோம்பு, மிளகாய், பொரிக் கடலை, கசகசா, இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாழைக்காய் துண்டுகளுடன் உப்பு மற்றும் தூளாக்கியுள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி கலந்து வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து வாழைக்காளை துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்தால் சுவையான கல்யாண வீட்டு ஸ்டைல் வாழைக்காய் ப்ரை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“