வத்தக்குழம்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் கல்யாண வீட்டு ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இந்த முறையில் செய்யும் போது முதல் முறை சாப்பிடுபவர்கள் கூட விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அப்படிப்பட்ட கல்யாண வீட்டு வத்தக்குழம்பு எப்படி செய்வது
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம்
கருவேப்பிலை
உப்பு
அரைத்த தக்காளி தொக்கு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
சீரகத்தூள்
சாம்பார் தூள்
புளி கரைசல்
சுண்டைக்காய்,மணத்தக்காளி வத்தல்
மிளகுத்தூள்
கருவேப்பிலை
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சுண்டைக்காய் மற்றும் மணத்தக்காளி வத்தலை சேர்த்து வதக்கவும்.அதில் பாதியை மிக்ஸியில் பொடியாக அறுக்கவும்.
பிறகு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு, அரைத்த தக்காளி தொக்கு சேர்த்து வேக வைக்கவும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், சாம்பார் தூள் சேர்த்து அதில் புளி கரைசல் சேர்த்து கொதி விடவும்.
கல்யாண வீட்டு வத்தகுழம்பு
கொதி விட்டு அதில் உப்பு சிறிது,வறுத்த வத்தல் மற்றும் பொடி வத்தல் சேர்த்து அதனுடன் மிளகுத்தூள், கருவேப்பிலை சேர்த்து சுண்ட விட்டு பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.
இதனை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“