அதிக உடல் எடை எவ்வளவு பிரச்சனையோ அதேபோல மெலிந்த உடல் தோற்றமும் பிரச்சனை தான். உடல் எடையை குறைக்க உணவு சாப்பிடுவது போல உடல் எடையை அதிகரிக்கவும் உணவு சாப்பிட வேண்டியது கட்டாயம் ஆகும்.
அப்படி உடல் எடையை அதிகரிக்க உதவும் ஒரு ட்ரிங்க் எப்படி செய்வது என்று பார்ப்போம். இது மருத்துவர் கார்த்திகேயனின் உடல் எடையை அதிகரிக்க உதவும் டிப்ஸ்.
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை
நிலக்கடலை
பால்
பேரிச்சைபழம்
வாழைப்பழம்
செய்முறை:
கொண்டைக்கடலையை மீடியம் ஃப்ளேமில் வைத்து வாசம் வரும்வரை வறுக்க வேண்டும். பின்னர் அதே அளவில் நிலக்கடலை வறுத்து இரண்டையும் ஆறவிட்டு தனித்தனியே அரைத்து எடுக்கவும்.
பின்னர் இரண்டு பொடிகளையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் கலந்து எடுக்கவும். ஒரு சல்லடையில் சளித்து எடுத்துக்கொள்ளலாம். இதனை ஒரு கண்னாடி ஜாரில் போட்டு வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது உபயோகிக்கலாம். நீண்ட நாட்களுக்கு வரும்.
weight gain drink | எடை அதிகமாக ஒரு டீ ஸ்பூன் இந்த பொடி போதும்
இப்போது புரோட்டின் மிக்ஸ் பால் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பால், பேரிச்சை, வாழைப்பழம் மற்றும் அரைத்த புரோட்டீன் பவுடர் இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும். இதனை தினமும் காலையில் சாப்பிட்டு வர ஒரே மாதத்தில் உடல் எடையில் மாற்றம் காணலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.