scorecardresearch

உடல் எடையை குறைக்க உதவும் சிக்கன் ரெசிபி: புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்யும்

உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் அளவை குறித்து கொள்ள வேண்டும். குறிப்பாக சிக்கனில் அதிக அளவில் புரத சத்து உள்ளது.

சிக்கன்

உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் அளவை குறித்து கொள்ள வேண்டும். குறிப்பாக சிக்கனில் அதிக அளவில் புரத சத்து உள்ளது.

172 கிராம் சமைத்த சிக்கனில் 54 கிராம் புரத சத்து இருக்கிறது. சிக்கனின் நெஞ்சு சதை பகுதி 100 கிராமில் 165 கலோரிகள் இருக்கிறது. இதன் 80 சதவிகிதமான கலோரிகள் புரோடீன் சத்தில் இருந்து வருகிறது. 20 சதவிகிதம் மட்டுமே கொழுப்பு சத்து உள்ளது.

அதனால் நீங்கள் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைத்து ஒரு வேளை உணவை தவிர்த்து சிக்கனை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி உடல் எடையை குறைக்கும் ரெசிபி இதோ.

சிக்கன் தந்தூரி

தேவையான பொருட்கள்: 6 சிக்கன் லெக் பீஸ், 2 ½ டீஸ் பூன் இஞ்சி- பூண்டு பேஸ்ட், 1 பச்சை மிளகாய் நறுக்கியது, கொத்தமல்லி 1 ½ ஸ்பூன்,  உப்பு – தேவையான அளவு,  2 ½  ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

செய்முறை: இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். சிக்கனின் லெக் பீஸ்களை நன்றாக கழுவி அதில் இந்த பேஸ்டை தடவ வேண்டும். தொடர்ந்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து தந்தூரி அடுப்பு அல்லது அவனில் வைத்து அவித்து எடுக்க வேண்டும். மேல் பரப்பில் இந்த ஆலிவ் எண்ணையை ஊற்றிகொள்ளவும்.  

குறைந்த கொழுப்பு உள்ள பட்டர் சிக்கன் ரெசிபி

தேவையான பொருட்கள் : 400 கிராம் சிக்கன், 3 பெரிய வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலகாய், பட்டை, ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட், 2 ஏலக்காய், 6 தக்காளி, உப்பு, ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி, ½ டேபிள் ஸ்பூன் மல்லி பொடி, 4 பச்சை மிளகாய், கொத்தமல்லி, க்ரீம், 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்க வேண்டும். தொடர்ந்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், கிராம்பு சேர்க்க வேண்டும். தொடர்ந்து வெங்காயம், பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் நறுக்கிய தக்காளி, க்ரீம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து இதை வேண்டும் என்றால் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சிக்கனை நன்றாக சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அரைத்த மசாலாவை சேர்க்கவும். தொடர்து அதில் மிளகாய் பொடி, மல்லி பொடி, பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். இவை நன்றாக சிக்கனுடன் சேர்ந்ததும் 25 நிமிடங்களில் அடுப்பை அணைக்கவும்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Weight loss chicken recipe protein content

Best of Express