உடலுக்கு ஆரோக்கியமானது என்றும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்றது பாசிபருப்பு என்று டாக்டர் மைதிலி கூறுகிறார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பருப்புகளில் 10-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், எடை இழப்பு அதிகம் உதவும் பருப்பு வகையில் பாசிப்பருப்பு முதன்மையான ஒன்றாக உள்ளது என்கிறார் டாக்டர் மைதிலி.
எடை இழப்பு என்று வரும் போது பாசிப்பருப்பு சிறந்த தேர்வாகும். இவற்றில் கலோரிகள் குறைவு. மேலும், இவை ஜீரணிக்க எளிதானதாகவும், மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கவும் செய்கிறது.
ஒரு கப் (200 கிராம்) பாசிப் பருப்பில்
கலோரிகள்: 212
கொழுப்பு: 0.8 கிராம்
புரதம்: 14.2 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள்: 38.7 கிராம்
ஃபைபர்: 15.4 கிராம் ஆகியவை உள்ளன.
அதேபோல ஃபோலேட், மாங்கனீஸ், வைட்டமின் பி1, பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இந்த வகை பருப்பில் நிறைந்துள்ளன. இந்த தாதுக்கள் அனைத்தும் உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை உருவாக்கவும், உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.
உடல்எடை குறைய/ மலசிக்கல் நீங்க Moong dal benefits in tamil பாசி பருப்பு நன்மைகள் /Dr.Mythili
பாசிப்பருப்பு எடை இழப்புக்கு மட்டுமல்லாமல், பல வழிகளில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இந்த பருப்பில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கவும், நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் உங்கள் உடல் நன்றாக செயல்பட உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.