உடல் எடை குறைக்க வேண்டும் எனப் பலரும் டயட், உணவு கட்டுப்பாடு, ஜிம் எனப் பல விஷயங்களை செய்து பார்த்திருப்போம். ஆனால் வீட்டிலேயே சுலபமாக கிடைக்கும் இந்த விஷயத்தை உங்களில் பலரும் செய்து பார்த்திருக்க மாட்டீர்கள். எளிமையாக 5 நிமிடத்தில் இதை செய்யலாம். இதன் பயன்களும் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெதுவெதுப்பான நீரில் தேன், லெமன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும் என தெரிவிக்கின்றனர்.
தேன் மற்றும் எலுமிச்சை ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் முதன்மையானதாக உள்ளது. தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கிளைசெமிக் இன்டக்ஸ் குறைவாக இருப்பதால், கலோரிகள் பங்களிக்காது. எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது.
எலுமிச்சையில் உள்ள பெக்டின் ஃபைபர்கள்’ சர்க்கரைகள் மற்றும் மாவுச்சத்துக்களின் செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை அனைத்தும் ஆரோக்கியமான எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது.
தேசிய தேன் வளர்ப்பு வாரியம் கூறுகையில், தேனில் கொழுப்பு இல்லை, கொலஸ்ட்ரால் இல்லை, சோடியம் இல்லை. ஆதலால், உண்மையில் தேன் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் தேன், எலுமிச்சை கலந்து குடிப்பது செல்லுலைட் சிகிச்சைக்கு உதவுகிறது. உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.
டெல்லியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் அன்ஷுல் ஜெய்பாரத் கூறுகையில், "தேன், எலுமிச்சை கலந்த தண்ணீர், காலையில் எடுத்துக் கொள்வதற்கான சிறந்த உணவு. இதன் நன்மைகளை பெற காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டும். இயற்கையான தேன் பயன்படுத்துவது நல்லது.
தேன், எலுமிச்சை மற்றும் தண்ணீர் குடிப்பது குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது மற்றும் உடல் எடையை நிர்வகிக்கிறது. தேன் மற்றும் எலுமிச்சை கலவை பசியை குறைக்கிறது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது" என்றார்.
மும்பையைச் சேர்ந்த தோல் மருத்துவரான டாக்டர் மாதுரி அகர்வால் கூறுகையில், "தேன், எலுமிச்சை தண்ணீர் குடிப்பது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக உங்கள் உடற்பயிற்சியின் போது ஆற்றல் அளவை பராமரிக்க உதவுகிறது. இதை வெதுவெதுப்பான நீரில் குடித்தால், மலச்சிக்கலை போக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. உடல் எடையை முறையாக நிர்வகிக்க உதவுகிறது" என்றார்.
எலுமிச்சை, தேன் உட்கொள்வதில் ஒவ்வாமை இருந்தால் நிச்சயம் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். அவர்களின் ஆலோசனைபடி உட்கொள்ளலாம்.