உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், எண்ணெய் அதிகம் சேர்க்காத உணவுகளை விரும்புவார்கள். அத்தகையவர்களுக்கு ஏற்ற, அதே சமயம் சுவையான, தயிர் உப்புமா எப்படி செய்வது என்று இங்கே காணலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒரு ஆரோக்கியமான காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தயிர்,
இஞ்சி,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி,
எண்ணெய்,
கடுகு,
கடலை பருப்பு,
முந்திரி பருப்பு,
பச்சை மிளகாய்,
வெங்காயம்,
மஞ்சள் தூள் மற்றும்
உப்பு.
செய்முறை:
அரை கப் தயிரில், ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி, சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி போட்டு இரண்டு கப் தண்ணீரில் கலக்க வேண்டும். இனி அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதில் தேவையான அளவு கடுகு, கடலை பருப்பு சேர்த்து வறுக்கலாம். குழந்தைகள் விரும்பும் வகையில் சிறிது முந்திரி பருப்பும் இத்துடன் சேர்க்கலாம். இதன் பின்னர், சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறாமல் வதக்க வேண்டும்.
இப்போது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இதையடுத்து, ஒரு கப் ரவை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும். இனி, தயிர் கலவையை இத்துடன் சேர்த்தால் சுவையான தயிர் உப்புமா தயாராகி விடும். இது எல்லோரும் விரும்பும் வகையில் சுவையாக இருக்கும். இது டயட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் பிடித்தமான ஒரு எளிய மற்றும் சத்தான உணவாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.