உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்க, இந்த கொள்ளு பருப்பு அடை ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள். இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவி செய்வதுடன் மிகவும் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு பருப்பு,
பச்சை பயிறு,
வரமிளகாய்,
இஞ்சி,
சோம்பு,
வெங்காயம்,
கேரட்,
கொத்தமல்லி,
குடைமிளகாய்,
பெருங்காயம்,
கடலை மாவு மற்றும்
சிறிதளவு எண்ணெய்
செய்முறை:
ஒரு கப் ஊற வைத்த கொள்ளு பருப்பு, அரை கப் பச்சை பயிறு, இரண்டு வரமிளகாய், சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சோம்பு ஆகியவை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், கொத்தமல்லி, குடைமிளகாய், கால் டீஸ்பூன் பெருங்காயம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இத்துடன் லேசாக எண்ணெய் சேர்த்து அடை வடிவத்திற்கு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை, மிதமான சூட்டில் வைத்து தோசைக் கல்லில் சுட்டு எடுத்தால் சுவையான கொள்ளு பருப்பு அடை தயாராகி விடும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை சாப்பிடலாம். ஆனால், அதிகமாக எண்ணெய் சேர்க்காமல் இதனை சாப்பிடுவது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.