ஃபிரிட்ஜை திறந்து அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கும் நபரா நீங்க? உடல் எடை அபாயம் பற்றி எச்சரிக்கும் மருத்துவர் சிவராமன்
"உடல் எடையை குறைக்க பிராய்லர் சிக்கன் போன்ற நேரடியாக வேக வேகமாக எடையை அதிகப்படுத்தும் உணவுகளை சில நாட்களுக்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்." என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
"உடல் எடையை குறைக்க பிராய்லர் சிக்கன் போன்ற நேரடியாக வேக வேகமாக எடையை அதிகப்படுத்தும் உணவுகளை சில நாட்களுக்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்." என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
டல் எடையை எப்படி எளிதில் குறைக்கலாம் என்பது குறித்து சித்த மருத்துவர் சிவராமன் பகிர்ந்துள்ளார்.
சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில், உடல் எடையை எப்படி எளிதில் குறைக்கலாம் என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
Advertisment
இது குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் மருத்துவர் சிவராமன் பேசுகையில், "உடல் எடையை மருந்துகளை வைத்து மட்டும் குறைக்கவே முடியாது. அதற்கு முதலில் உணவின் மீது அக்கறை வைக்க வேண்டும். பிறகு உடற்பயிற்சி செய்தல் வேண்டும். அதற்கு மேலும் தேவைப்பட்டால், உடலின் எடையை குறைப்பதற்கு உதவி செய்யக்கூடிய சில மூலிகைகள் இருக்கின்றன.
உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். அதற்காக நாம் சில வரைமுறைகளை வைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு பால் தேவையில்லை. எந்தக் காரணம் கொண்டும் பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருட்களை சேர்க்கக் கூடாது.
எந்த விதமான இனிப்புகளும் சேர்க்கக் கூடாது. குறிப்பாக, வெள்ளை சர்க்கரை சேர்த்த இனிப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நேரடியாக சர்க்கரையைக் கொடுக்கக்கூடிய கிழங்குகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. பட்டை தீட்டிய தானியங்களை தவிர்த்து விடலாம். பச்சரிசி, மைதா மாவு போன்ற உணவுப் பொருட்களை வேண்டவே வேண்டாம் என்று சொல்லி விட வேண்டும்.
Advertisment
Advertisements
பிராய்லர் சிக்கன் போன்ற நேரடியாக வேக வேகமாக எடையை அதிகப்படுத்தும் உணவுகளை சில நாட்களுக்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நடுஇரவில் ஃபிரிட்ஜை திறந்து அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.
இவைதவிர, ஒரு நாளைக்கு எடுக்கக் கூடிய உணவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். காலையில் வெந்நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து, காலை பானமாக அருந்தி வரலாம். காபி, டீ-யை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
காலை 8 மணி அளவில், வெறும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மாதுளை, பப்பாளி, தர்பூசணி, கொய்யாப்பழம் போன்ற பழங்களை இந்த நேரத்தில் சாப்பிட்டு வரலாம். 11 - 11:30 மணிக்கு கிரீன் டீ அல்லது மோர் போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.
மதிய வேளையில் மட்டும் தனியாக வகைகளை எடுத்துக் கொள்ளலாம். அரிசி, திணை அரிசி, வரகு அரிசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அவற்றுடன் காய்கறிகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் அதிக எண்ணெய் இருத்தல் கூடாது. புலால் உணவுகளை தவிர்க்கலாம்.
மதியம் சாதம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என ஒரு சிலருக்கு குழப்பம் இருக்கலாம். ஒரு கப் அல்லது இரண்டு கப் அளவு அரிசி சாதம் எடுத்துக் கொள்ளலாம். மீதத்திற்கு காய்கறிகளை அதிகமாக சேர்த்தல் வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தட்டில் சாதம் போட்டு காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவதற்குப் பதிலாக, தட்டில் காய்கறிகளை அதிகம் போட்டு சாதம் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மலையில், பால் சேர்க்காத தேநீர் அருந்தலாம். சர்க்கரை சேர்க்காத லெமன் டீ, லவங்க பட்டை சேர்த்த டீ ஆகியவற்றை சாப்பிடலாம். இரவில், வெறும் காய்கறிகளை சாப்பிடலாம். சப்பாத்தி, சாதம் வேண்டும். தனியாக வெண்டைக்காய் பொரியல், பீன்ஸ் பொரியல் போன்ற சாப்பிட்டு வரலாம். இப்படி திட்டமிட்டு சாப்பிட்டு வரலாம்.
இவற்றை தவிர, வாரத்தில் ஒருநாள் முழுதும் பழ வகைகளை சாப்பிட்டு வரலாம். மற்றொரு நாள் நீர் உணவுகளை எடுத்து வரலாம். அதாவது, பழச்சாறு போன்றவற்றை மட்டும் அன்றைய நாள் முழுதும் அருந்தி வரலாம்.
உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, காலையிலும் மாலையிலும் நல்ல நடைப் பயிற்சி செய்து வரலாம். கைகளை வீசி குறைந்து 3 கி.மீ தூரம் வரை நடந்து வரலாம். இப்படி செய்து வரும் போது உடல் எடை வேகமாக குறையும். இவற்றுடன் உணவியல் வல்லுநர், உடற்பயிற்சி ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தால் இன்னும் வேகமாக உடல் குறையும். இந்த நடவடிக்கையில் இறங்கும் முன்பு நாம் மனதளவில் திடமாக இருத்தல் வேண்டும். எனவே, அக்கறையுடன் சரியாக செயல்பட்டு வந்தால், நீங்கள் உங்கள் எடையை எளிதில் குறைத்து விடலாம்" என்று அவர் கூறுகிறார்.