Benefits of soy milk : நீங்கள் வழக்கமான பாலில் இருந்து மாற்றலாக ஏதேனும் வேண்டும் என்று நினைத்தால் அதற்கு சோயா பால் சிறந்த தேர்வாக இருக்கும்.
இதில் நன்மை தரும் பேட்டி ஆசிட், புரத சத்து, நார்சத்து, வைட்டமின், மினரல்ஸ் இருக்கிறது. இந்நிலையில் சோயா பாலில் இருக்கும் பல்வேறு நன்மைகளை தெரிந்திகொள்வோம்.
இதில் அதிக புரோட்டீன் குறந்த நார் சத்து இருப்பதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமையும். மேலும் இந்த பாலில் உள்ள இனிப்பு தன்மை மிகவும் குறை என்பதால் உடல் எடை அதிகரிக்காது.
இதில் இருக்கும் மோனோ மற்றும் பாலி சாச்சுரேடட் பேட்டி ஆசிட், கெட்ட கொல்ஸ்ட்ராலை குறைத்து நல்ல கொல்ஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது. இதனால் இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து இதய நோய் வாராமல் தடுக்கும்.
உடலுக்கு தேவைப்படும் கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கிறது. சோயா பால் தேவையான சத்தை தருவதால் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான சாத்தியங்கள் குறைகிறது.

மாதவிடாய் நின்றுபோன பெண்கள் சந்திக்கும் சிக்கலை சோயா பால் குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோன பிறகு உடல் எடை அதிகரித்தல், மனநிலையில் மாற்றம், சர்க்கரை நோய், டிப்ரஷன் ஏற்படும் . இதனை சரி செய்ய சோயா பால் உதவுகிறது.
இதுபோல ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள புரோட்டீன் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.