scorecardresearch

சுவையான உணவு காம்போ மூலம் உடல் எடை குறைக்கலாம் ! 

சுவையான உணவு வகைகளில், நாம் நமது உடலை குறைக்க முடியும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவதுடன் நமது உடல் எடையை குறைப்பது முக்கியமாக பார்க்கபடுகிறது. இந்திய உணவு வகைகளில் சில காம்போக்களை நாம் சேர்த்து சாப்பிடும்போது, உடல் எடை குறையும்.

இட்லி சாம்பார்

இது நீங்கள் ஏற்கனவே வீட்டில் காலை உணவாக, சாப்பிடும் இட்லி சாமார் இதில் குறைந்த கலோரிகள் இருக்கிறது. இட்லியில் 40-60 கலோரிகள் இருக்கிறது. இதனால் நீங்கள் இதை சாப்பிடலாம்.

ரொட்டி, காய்கறி சப்ஜீ  

இந்நிலையில் எண்ணெய் இல்லாத சப்பாத்தி மற்றும் காய்கறிகள் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட வேண்டும்.  அதிக வைட்டமின்ஸ், நார்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கும் காய்கறிகளை தேர்வு செய்வது சாப்பிடலாம்.

அவல் உப்புமா

அவல் உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடல் எடை குறைவதோடு சுவையான உணவும் கிடைக்கும். மேலும் இதில் நார்சத்து, இரும்பு சத்து  ஆகியவை இருக்கிறது.

கிச்சடி மற்றும் தயிர்

துவரம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை வைத்து செய்யும் கிச்சடி உடலுக்கு மிகவும் நல்லது. 203 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Weight loss with food items