வெயிட் லாஸ் செய்யும் மக்களே... நைட் தூங்கும் முன் இந்த டிரிங்க்; செம்ம ரிசல்ட் இருக்கு!

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் நைட் தூங்கும்முன் இந்த ஒரு ட்ரிங்க் குடிங்கள். தினமும் இதனை குடிக்கலாம். மிகவும் சுலபமான இந்த ட்ரிங்கை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் நைட் தூங்கும்முன் இந்த ஒரு ட்ரிங்க் குடிங்கள். தினமும் இதனை குடிக்கலாம். மிகவும் சுலபமான இந்த ட்ரிங்கை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
weight loss

நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால், இரவு தூங்குவதற்கு முன் இந்த சிறப்புப் பானத்தை (நைட் ட்ரிங்க்) குடித்து வரலாம். இதைத் தொடர்ந்து குடித்து வந்தால், உங்கள் தொப்பையின் அளவு குறைந்து, இலகுவாக எடையைக் குறைக்க முடியும் என்றும் அதற்கான ஒரு ட்ரிங் பற்றியும் கோவில்பட்டினம் சமையல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.  விளக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், இது பிசிஓடி (PCOD) சார்ந்த பிரச்சனைகள், ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு பிரச்சனைகள் மற்றும் தேவையற்ற முடி வளர்ச்சி போன்ற உடல் பருமன் சார்ந்த பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டு வர உதவ வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைட் ட்ரிங்க் செய்யத் தேவையான பொருட்கள்:

தண்ணீர்: 200 மில்லி
சன்ன லவங்கப் பட்டை பொடி (Cinnamon Powder): 2 சிட்டிகை
மஞ்சள் தூள் (Turmeric Powder): 2 சிட்டிகை 
மிளகுப் பொடி (Pepper Powder): 2 சிட்டிகை
தேன் (Honey): 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் (விரும்பினால்) 

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் லவங்கப் பட்டை, மஞ்சள் மற்றும் மிளகுப் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கொதிக்க வைத்து, டீ போன்று தயார் செய்துகொள்ளவும். தேன் விரும்புவோர் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். இதை நீங்கள் இரவு உணவு சாப்பிட்ட பிறகு, தூங்குவதற்கு முன்னால், நன்கு சூடாகவே குடித்துவிட்டுப் படுக்கவும்.

Advertisment
Advertisements

லவங்கப் பட்டை: இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைக்க உதவுகிறது. இதன் மூலம் இன்சுலின் ஸ்பைக்கை (Insulin Spike) தவிர்த்து, பசி உணர்வைக் குறைத்து, தேவையற்ற கொழுப்பு உடலில் சேருவதைத் தடுக்கிறது.

மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் (Anti-inflammatory) கொண்டது. உடலில் ஏற்படும் நாள்பட்ட வீக்கம் (Chronic Inflammation) உடல் பருமனுக்கு ஒரு முக்கியக் காரணம். இந்த குர்குமின் வீக்கத்தைக் குறைத்து, வளர்சிதை மாற்றக் கோளாறுகளைச் சரிசெய்ய உதவுகிறது.

மிளகு: மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) என்னும் வேதிப்பொருள், மஞ்சள் குர்குமின் உடலால் உறிஞ்சப்படுவதை (Absorption) பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இது தெர்மோஜெனீசிஸ் (Thermogenesis) எனப்படும் செயல்முறையைத் தூண்டி, கொழுப்பை எரிக்க (Fat Burning) உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Basic tips for sustainable weight loss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: