scorecardresearch

அட என்ன பண்ணாலும் எடை குறையவில்லையா? நீங்கள் செய்யும் தவறுகள் இதுதான்

பல முயற்சிகள் செய்தும் உடல் எடை குறையாமல் உங்களுக்கு இருக்கிறதா?. தொடர்ந்து ஒரு டயட் பிளானை சரியாக தொடர முடியவில்லையா? பல வழிகள் முயற்சித்தும் உங்களால் உடல் எடை குறைக்க கடினமாக இருந்தால் நீங்கள் முக்கியமான தவறுகளை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

வெறும் உடல் எடை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள், ஆரோக்கியம், அதிக நேரம் வேலைகள் செய்ய வலிமை, உடல் சோர்வு ஏற்படாமல் இருப்பது போன்ற விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.

முன்பு நீங்கள் சில டயட் பிளான் பின்பற்றி எடை குறைத்திருக்கலாம். ஆனால் அதுவே இந்த முறை வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் நம்பினால் அது தவறு. இந்த முறை புதிதாக முயற்சி செய்யுங்கள்.

ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பது தவறு தொடர்ந்து அதற்கான முயற்சிகளை செய்யுங்கள். மூன்று மாதங்கள் கழித்து அதற்கான பலன் தெரியலாம்.

உடல் எடை குறைத்தே ஆக வேண்டும் என்று எப்போதும் நினைத்து கொண்டே இருக்க வேண்டாம். ஒரு வருடத்தில் 10% ஒட்டுமொத்த உடல் எடையிலிருந்து குறைப்பதுதான், ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு முயற்சி. அதிகமாக சாப்பிட்டால், அதற்கு அதிக உடல் பயிற்சி செய்துகொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். இது சரியான வழிமுறை இல்லை.

தினமும் நீங்கள் எவ்வளவு பசி இருக்கிறதோ அதே அளவிற்கு உணவு சாப்பிட வேண்டும். எந்த உணவு உங்களுக்கு சரிவருகிறதோ அதே உணவை சாப்பிடலாம். 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Weigth loss mistakes you make daily