சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் சீறுநீரகக் கல்கள் ஏற்படுகின்றன.
இது மரபு வழியாக ஏற்படும் அபாயமும் உள்ளது. அதேநேரம் சீரற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் வாயிலாகவும் ஏற்படுகிறது. குறிப்பாக போதிய அளவு தண்ணீர் அருந்தாததாலும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்னென்ன
சிறுநீரில் உள்ள கற்களை தொடக்கக் கட்டத்தில் அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. சிலருக்கு சீறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படலாம். இந்த வலி பின்னாள்களில் வயிற்றில் இருந்தும் பரவலாம்.
மேலும் சிலருக்கு சீறுநீர் கழிக்கும்போது ரத்தம் வரலாம். இதை தடுக்க நமது உணவு பழக்கவழக்கங்களில் இடம் உள்ளது. அந்த வகையில் நாளொன்றுக்கு 5 கிராமுக்கு குறைந்த அளவிலேயே உப்பு எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
புடலங்காய் பொரியல்
புரதசத்து மிகுந்த இறைச்சி, பயிறுகள் உள்ளிட்டவையும் சீறுநீரக கற்களை தடுக்கின்றன. இதில் முக்கிய உணவுப் பொருளாக புடலங்காய் உள்ளது. புடலங்காயில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து நிரம்பி உள்ளது.
மேலும் இதில் குறைந்த அளவே ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது. இதனால் புடலங்காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லதாகும். குறிப்பாக சிறுநீரகக் கல் உள்ள நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும்.
வெள்ளரிக்காய் பிஞ்சு
மேலும், புடலங்காய் ரத்த அழுத்தத்துக்கும் நல்ல மருந்தாக உள்ளது. இது தவிர வெள்ளரிப் பிஞ்சு உள்ளிட்ட நீராக காய்கறிகளும் சீறுநீரக கல் குணமாக நல்லது.
அந்த வகையில், வாரத்துக்கு ஒருமுறையாவது புடலங்காயை, வெள்ளரிக்காய் பிஞ்சு உள்ளிட்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/