கடந்த சில வருடங்களாக சைவம் உணவை மட்டுமே சாப்பிடும் நபர்கள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுவாக சைவ உணவுகள் சாப்பிடுவது, நாம் வாழும் சூழலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அசைவ உணவை ஒரு மாதம் வரை சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில் அப்படி நாம் சாப்பிடாமல் இருந்தால் மோசமான நோய்களான இதய நோய், ரத்த அழுத்தம், டைப் 2 வகை சர்க்கரை நோய், குறிப்பிட்ட வகை புற்று நோய் ஏற்படாது.
இந்நிலையில் சைவ உணவில் அதிக நார்சத்து உள்ளது இது நமது ஜீரணத்தை அதிகப்படுத்தும். வயிற்றின் செயல்பாடுகளையும் இது பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் அசைவ உணவுகளை ஒப்பிட்டு பார்க்கையில், சைவ உணவில் குறைந்த கலோரிகள் உள்ளது.
இந்நிலையில் நார்சத்தும் உள்ளதால், நாம் அதிகமாக சாப்பிட்டோம் என்ற எண்ணம் இருக்கும். சிலவகை பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடும்போது வீக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் இந்த வகை உணவுகளை நாம் தவிர்க்கும்போது வீக்கத்திலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
இந்நிலையில் மாமிசத்தில் சாச்சுரேடட், டிராஸ் கொழுப்பு சத்து உள்ளது. மேலும் வாழ்க்கைக்கு தேவையான கொலஸ்ட்ரால் இதில் இருக்கும்.
இந்நிலையில் இந்தவகை மாமிச உணவை சாப்பிடாமல் இருந்தால், கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்கள் தொடர்பாக நோய் வருவது குறையும்.
அசைவ உணவை அதிகமாக சாப்பிட்டால், ஒருவித சோர்வும், தூக்கம் வரும் எண்ணமும் ஏற்படும். இந்நிலையில் தாவரவகை உணவை சாப்பிடும்போது, அதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நீண்ட நேரத்திற்கு சீரான சக்தியை கொடுக்கும்.
உலக சுகாதார நிறுவனம், பரிந்துரைகளில் பதப்படுத்தப்பட்ட மாமிசம் குறிப்பாக பேக்கன், சாசேஜஸ், டெலி மாமிச வகைகள் பெரும் குடல் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சிவப்பு மாமிசமான மாட்டுக்கறி, பன்றிக் கறி, இளம் ஆட்டு கறி, கணையப் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய்யை கூட ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எல்லா அசைவ உணவுகளும் பிரச்சனை ஏற்படுத்தாது. குறிப்பாக மீன் மற்றும் லீன் மீட் வகைகள் உடலுக்கு நன்மை தரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil