scorecardresearch

உடல் பயிற்சிக்கு பிறகு எப்படி சாப்பிட வேண்டும்? புரோட்டீன், கார்போஹைட்ரேட் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்

உடல் எடை குறைப்பதற்கு உடல் பயிற்சி மிகவும் முக்கியம். நமது மூட்டுகள் மற்றும் தசைகள் வலுவாக்க உடல் பயிற்சி உதவுகிறது. சிறிய டம்பல்களால் வெயிட் டிரெயினிங் செய்வதால், சிறிய தசைகள் ஒன்றாக சேர்ந்து இருக்கமாக மாறும்.

உடல் பயிற்சி
உடல் பயிற்சி

உடல் எடை குறைப்பதற்கு உடல் பயிற்சி மிகவும் முக்கியம். நமது மூட்டுகள் மற்றும் தசைகள் வலுவாக்க உடல் பயிற்சி உதவுகிறது. சிறிய டம்பல்களால் வெயிட் டிரெயினிங் செய்வதால், சிறிய தசைகள் ஒன்றாக சேர்ந்து இருக்கமாக  மாறும்.

இந்நிலையில் கடுமையாக உடல் பயிற்சி செய்துவிட்டு தவறாக உணவை எடுத்துக்கொண்டால், ஒட்டுமொத்தமாக உடல் பயிற்சி செய்த பலன் இல்லாமல் போய்விடும். குறிப்பாக யோகா செய்வதும் உடல் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துகிறது.

உடல் பயிற்சி செய்துவிட்டு 10 முதல் 20 கிராம் வரை புரத சத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். அவரவர் உடல் எடைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடல் பயிற்சிக்கு பிறகு பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், பைடோ நியுட்ரிஷியன்ஸ் இருக்கிறது. இவை வீக்கத்தை குறைக்கும். மேலும் இதில் இருக்கும் நார்சத்து ரத்த குளுக்கோஸை மெதுவாக ரத்தத்தில் கலக்க முயற்சிக்கும். பழங்கள் மற்றும் தயிர் ஆகியவை, புரத சத்து மற்றும் நாசர்த்து வழங்குகிறது.

இதுபோல முளைகட்டிய பயிறு வைத்து சாலிட் மற்றும் அதில் எலுமிச்சையை நாம் சேர்த்து கொள்ளலாம். மேலும் அதில் மசாலாவை கூட தூவி சாப்பிடலாம். மேலும் நட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்.

மாட்டுப் பாலில் இயற்கையாகவே சிறிது இனிப்பு இருக்கும். இந்நிலையில் அதை குங்குமப் பூ சேர்த்து குடிக்கலாம்.

நட்ஸ் மற்றும் பூசனி அல்லது வேறு விதைகளை வைத்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். காலை உணவுக்கு முன்பாக உடல் பயிற்சி செய்தால் உப்புமா, போஹா, தோசை சாப்பிடலாம். ஆனால் அளவில் கவனமாக இருக்க வேண்டும்.

டிரைப் புரூட்ஸ், ஓட்ஸ், நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். பாதாம் பாலில், நட்ஸ் மற்றும் டிரை பூரூட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்.

இதுபோல மோரை அடித்து குடிப்பது, கிட்டதட்ட புரோட்டீன் ஷேக் போல் பலன் தரும். அவித்த முட்டையை சாப்பிடலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: What to eat after workouts how to decide the ratio of proteins and carbs