scorecardresearch

கோதுமை மாவு இருக்கா? இந்த கோதுமை தேங்காய் அடையை சமைத்து பாருங்க

இது இனிப்பாகவும், அதேநேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். மிகவும் ஈசியாக செய்யும் கோதுமை தேங்காய் அடையை வீட்டில் செஞ்சுபாருங்க.

கோதுமை மாவு இருக்கா? இந்த கோதுமை தேங்காய் அடையை சமைத்து பாருங்க

இது  இனிப்பாகவும், அதேநேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். மிகவும் ஈசியாக செய்யும் கோதுமை தேங்காய் அடையை வீட்டில் செஞ்சுபாருங்க.

தேவையான பொருட்கள்

வாழை இலை

கோதுமை மாவு

தேங்காய்

சர்க்கரை

ஏலக்காய்

செய்முறை: கோதுமை மாவில் தண்ணீர் சேர்க்கவும். கோதுமை தோசை பதம் போல அல்லாமல் மிகவும் தண்ணீர் அதிகம் இல்லாமலும் கலக்க வேண்டும். கிட்டதட்ட வடை போடு பக்குவம். இப்போது வாழை இலையை சதுர அளவில் வெட்டி. அதை தீயில் சூடு செய்ய வேண்டும். இந்நிலையில் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை கலந்து, அத்துடன் ஏலக்காயை இடித்து சேர்க்க வேண்டும். தொடர்ந்து வாழை இலையில் கோதுமை மாவை நிரப்ப வேண்டும். அதற்கு நடுவில் இந்த தேங்காய் கலவையை நிரப்ப வேண்டும். இப்போது இலையை நன்றாக முழுவதுமாக மூட வேண்டும். இப்போது இரும்பு கல்லை சூட வைத்து அதில் வாழை இலையை வைத்து வேக வைக்கவும். இறுதியாக வாழை இலையை பிரித்து இந்த அடையை சாப்பிட வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Wheat adai special recipe