கோதுமை மாவு, தயிர் மட்டும் வைத்து மைசூர் போண்டா புசுபுசுன்னு எப்படி செய்வது என்று கோமதீஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
கோடை விடுமுறை விட்டாச்சு பிள்ளைகள் எல்லோரும் வீட்டில் தான் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? அப்போ இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணுங்க ரொம்ப ஈஸியா சீக்கிரமா செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் உப்பு ஆப்பசோடா எண்ணெய் கோதுமை மாவு இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை சீரகம்
Advertisment
Advertisements
செய்முறை
ஒரு பவுலில் தயிர் சேர்த்து விஸ்க் வைத்து அடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, ஆப்ப சோடா, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். நன்கு நுரைத்து வரும் வரை அடித்துக் கொள்ளவும். நல்ல நுரை வந்ததும் அதில் கோதுமை மாவை சேர்த்து நன்கு அடித்து கலந்து விடவும்.
தயிருடன் மாவு சேர்த்து நன்கு இளகி வந்ததும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து ஒரு நாற்பது ஐந்து நிமிடம் ஊற விடவும்.
பின்னர் இந்த மாவை எடுத்து உருண்டை பிடித்து போண்டா மாதிரி எண்ணெயில் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கலாம் சுவையாக இருக்கும். இந்த போண்டா விற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.