பலரும் கோதுமை போண்டா செய்யும்போது, பசை போல மாவு பிசைந்துவிடுவார்கள், அதனால், கோதுமை போண்டா வேகாமல் போய்விடும். கோதுமை போண்டா நன்றாக மொறு மொறு என சுவையாக இருக்க வேண்டும் என்றால் அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு சரி விகிதத்தில் கலப்பது முக்கியம்.
கோதுமை போண்டா செய்ய அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு சரி விகிதத்தில் கலந்து மொறு மொறு என சுவையாக கோதுமை போண்டா செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
கோதுமை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 1 கப் அளவு
கடலை மாவு 1/2 கப்
அரிசி மாவு கால் கப்
இஞ்சி பொழியாக நறுக்கியது 1 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் 2
கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் பொடியாக இல்லாமல் கொஞ்சம் பெரியதாக நறுக்கியது
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சமையல் சோடா 2 சிட்டிகை
பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மாவு கலப்பதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், முதலில் கோதுமை மாவு 1 கப் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, அதே கப் பயன்படுத்தி, அரிசி மாவு 1/2 கப் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, 1/4 கப் அளவு கடலை மாவு எடுத்துக்கொள்ளுங்கள், இப்போது, 3 மாவையும் நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அடுத்து 1 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, இஞ்சி பொடியாக நறுக்கியது 1 மேசைக் கரண்டு அளவு எடுத்துக்கொள்ளுங்கள், அடுத்து, கறிவேப்பிலை 2 கொத்து பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். கொத்துமல்லி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். 1 பெரிய வெங்காயத்தை பொடியாக இல்லாமல் கொஞ்சம் பெரிய பெரிய அளவில் நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, சீரகம் அரை டீஸ் பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து, இதை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பிசையுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள்.
அடுத்து உப்பு தேவையான அளவு சேர்த்துகொள்ளுங்கள், அடுத்து, சமையல் சோடா மாவு 2 சிட்டிகை சேர்த்துக்கொள்ளுங்கள். பெருங்காயம் கால் டீஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். இதையும் நன்றாக சேர்த்துக் கலந்துவிடுங்கள். நன்றாகக் கலந்து விட்ட பின் உப்பு உங்களுக்கு தேவையான அளவு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஸ்டவ்வை பற்ற வைத்து, ஒரு வானலியை வைத்து எண்ணெய் உற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் நாம் கலந்து வைத்த மாவை உங்களுக்கு தேவையான அளவு எடுத்து எண்ணெயில் போட்டு போண்டா செய்யுங்கள். நன்றாக பொறிந்து வந்ததும் போண்டாவை எடுத்து வையுங்கள். அவ்வளவுதான், சுவையான மொறுமொறு கோதுமை போண்டா தயார். சாப்பிட்டு பாருங்கள், சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“