சப்பாத்தி சாப்பிட்டு சலித்து போனவர்கள் இனி இந்த மாதிரி கோதுமை மாவில் ஒரு டிஷ் ட்ரை பண்ணுங்க. சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் இதை சாப்பிடலாம். சஃப்ட் மற்றும் டேஸ்டியான கோதுமை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலைகள்
சீரகம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, சீரகம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விடவும்.
மேலும் அந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொண்டால் இன்ஸ்டன்ட் மாவு ரெடியாகிவிடும்.
பின்னர் தோசைக் கல்லில் எப்போதும் போல தோசை மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசை பொன் முறுகலாகும் வரை வேக விட்டு எடுக்க வேண்டும். இதற்கு எப்போதும் போல சட்னி, சாம்பார் சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“