பூரி, சப்பாத்திக்கு மாவை பிசைவது, உருண்டைகளாக உருட்டுவது என சில வேலைகள் இருக்கின்றன. ஆனால் கோதுமை மாவை சிம்பிளாக பயன்படுத்த வழி செய்வது தோசை. ஆனால் சப்பாத்தி, பூரியில் பழகிய பலருக்கு கோதுமை தோசை பிடிப்பதில்லை. செய்ய வேண்டிய முறையில் செய்தால், கோதுமை தோசையும் எல்லாருக்கும் பிடிக்கும். அப்படி சாஃப்டான எல்லோருக்கும் பிடித்த கோதுமை தோசையை எல்லோருக்கும் பிடித்த மாதிரி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
வெங்காயம்
தயிர்
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில் கோதுமை மாவுடன் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு உப்பு சேர்த்து, மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும், தேவையென்றால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வழக்கம்போல தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வழக்கமான தோசை ஊற்றுவது போல் ஊற்றவும். இப்படி சுட்டு எடுத்தால், தயிர் மிக்ஸான சுவையான மொறு மொறு கோதுமை தோசை ரெடி. தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சாப்பிட்டால், இந்த கோதுமை தோசை சூப்பராக இருக்கும்.
கோதுமை தோசை நல்லா மொறு மொறுன்னு வர இப்படி செய்துபாருங்கள் | crispy wheat dosa recipe |kothumai dosai
கோதுமையில் நார்சத்து அதிகம் இருப்பதால், உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் கோதுமை உணவு பரிந்துரை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.