எப்போதும் இல்லாதது போல் சுவையான கோதுமை தோசையும் பாம்பே சட்னியும் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம். கோதுமை மாவு கரைக்கும்போது அதில் கூறப்படும் முக்கியமான பொருட்களை சேர்த்தாலே போதும் தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறுகிறார்.
கோதுமை தோசை அதற்கேற்ற பாம்பே சட்னி செய்முறை குறித்து செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
சீரகம்
பச்சை மிளகாய்
இஞ்சி
பெருங்காயத்தூள்
உப்பு
கருவேப்பிலை
சர்க்கரை
செய்முறை
இவை அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்து தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். அனைத்து பொருட்களும் நன்கு கலந்து இருக்க வேண்டும். பின்னர் எப்போதும் போல தோசை ஊற்றலாம். மேலே சுவைக்கு நெய் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கலாம். கோதுமை தோசைக்கு பெருங்காய்த்தூளும் கருவேப்பிலையும் மிக முக்கியம். எனவே அதை சேர்க்க மறந்துவிடக்கூடாது என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறுகிறார்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு
பெருங்காயத்தூள்
உப்பு
கடுகு
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
கொத்தமல்லி தழை
நெய்
செய்முறை
அனைத்தையும் தண்ணீர் மாதிரி கரைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் அனைத்தையும் 2 நிமிடம் வேக வைக்கவும்.
Venkatesh Bhat makes Wheat Dosa & Bombay Chutney | கோதுமை தோசை | bombay சட்னி recipe | godhumai dosa
பின்னர் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு கரைசலை போட்டு தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா சிறிது போட்டு கலந்து பெருங்காயத்தூள் மற்றும் மேலே சிறிது கொத்தமல்லி தழை தூவி கலந்து விடவும். ஒரு கொதி விட்டாலே போது சட்னி கெட்டியாகிவிடும். பின்னர் மேலே சிறிது நெய் ஊற்றி கலந்து இறக்க வேண்டும்.