ஐஸ்கீரிம் வகையைச் சேர்ந்த ஃபலூடா ரெசிபி பலருக்கும் பிடிக்கும். பெரும்பாலும் ஹோட்டல் சென்றால் வாங்கிச் சாப்பிடுவோம். அந்தவகையில் வீட் ஃபலூடா என்று சொல்லக் கூடிய கோதுமை ஃபலூடா ரெசிபியை பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அதுகுறித்து இங்கு பார்ப்போம். கோடை காலமும் தொடங்கிவிட்டது கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்க.
வீட் ஃபலூடாவுக்கு தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – அரை கப்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
வெனிலா ஐஸ்கிரீம் – சிறிதளவு
பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – 10
மாம்பழச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் – 1 டேபிள் ஸ்பூன்
பொடித்த முந்திரி – 1 டீஸ்பூன்
வேஃபர் பிஸ்கட் – 2
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். லோ ஃபிளேமில் வைத்து பிசைந்த மாவைப் போட்டு கிளறி வெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும். நீரில் வெந்த நூடுல்ஸை வடிகட்டி, ஐஸ் கட்டிகளை மேல் போட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இதை ஒரு வடிதட்டியில் போட்டு வைக்கவும். ஒரு நீண்ட கண்ணாடி கிளாஸில் முதலில் வடிகட்டிய நூடுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். அடுத்து 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அடுத்து ஃப்ரூட் ஜாம் இரண்டு டீஸ்பூன் போட்டு, மேலாக ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். அடுத்து மாம்பழச் சாறு, 1 டீஸ்பூன் சர்க்கரை போடவும். இதன்மேல் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, சிட்டிகை பச்சை ஃபுட் கலர் சேர்க்கவும். மேலாக முந்திரிப் பொடியை தூவி, வேஃபர் பிஸ்கட்டுடன் பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/