ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்தது. கோதுமையில் சத்துகள் நிறைந்துள்ளன. கோதுமையில் பல உணவுகள் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் கோதுமை கொண்டு சிம்பிள் ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, வெண்ணெய், ஓமம், சமையல் சோடா சேர்த்து பிசையவும். இதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கெட்டியான பூரி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். இப்போது கையில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை எடுத்து உருண்டை பிடிக்கவும். வெறும் மாவில் புரட்டி வைக்கவும். பின்னர் அதை சப்பாத்திக் கல்லில் வைத்து சப்பாத்தி போல திரட்டவும். பிறகு, கத்தியால் டைமண்ட் (பிஸ்கட்) வடிவில் சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் டைமண்ட் வடிவ மாவை போட்டு அடுப்பை லோ பிளேமில் வைத்து பொரித்து எடுக்கவும். சிப்ஸ் பொன்னிறமாக, முறுகலாக ஆனதும் ஒரு வடிதட்டில் எடுக்கவும். இதைப் போல் மீதமுள்ள மாவையும் போட்டு எடுக்கவும். சிப்ஸ் ஆறினப் பின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து சாப்பிடவும். அவ்வளவு தான் சிம்பிள்
கோதுமை சிப்ஸ் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/