scorecardresearch

நெய், சர்க்கரை வேண்டாம்.. ஆனாலும் அல்வா செய்யலாம்.. சிம்பிள் ரெசிபி இதோ!

கோதுமை அல்வா எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

நெய், சர்க்கரை வேண்டாம்.. ஆனாலும் அல்வா செய்யலாம்.. சிம்பிள் ரெசிபி இதோ!

அல்வா பலருக்கும் பிடிக்கும். அதுவும் திருநெல்வேலி அல்வா மிகவும் புகழ்பெற்றது. பொதுவாக ஸ்வீட் ரெசிபிகளில் நெய், சர்க்கரைக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இந்த பொருட்கள் சேர்க்காமலும் அல்வா செய்யலாமாம். ஆம், கோதுமை அல்வா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 1/2 கப்
தேங்காய் பால் – 2 கப்
தண்ணீர் – 3 கப்
உப்பு – 1 சிட்டிகை
பொடித்த வெல்லம் – 2 கப்
பொடித்த முந்திரி பருப்பு – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – 1/4 கப் டீஸ்பூன்

செய்முறை

கோதுமை அல்வா நெய், சர்க்கரை இல்லாமல் வெல்லம் கொண்டு சுவையாக செய்யலாம். இதற்கு முதலில் ஒன்றை கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிசைந்து வைத்த மாவுடன் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மாவு நன்கு தண்ணீரில் ஊறியதும் அதை பிசைந்து விடுங்கள். தண்ணீரில் மாவை கரைத்த பின்பு சிறிதளவு திப்பிகள் இருக்கும். இதை நன்கு வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த தண்ணீரை ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். அப்பொழுது தான் மேலே தேவையற்ற தண்ணீர் தெளிந்து வரும்.

ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த தண்ணீரை மட்டும் எடுக்கவும். மீதம் உள்ளதை கீழே ஊற்றி விடுங்கள். இப்போது கோதுமை மாவுடன் 2 கப் அளவிற்கு கெட்டியான தேங்காய் பாலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து 2 கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும். வெல்லம் கரைந்ததும் அதை சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்து நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கோதுமை பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து ஓரளவுக்கு கெட்டியாக திரண்டு வரும்போது வெல்லப் பாகை ஊற்ற வேண்டும். பாகை ஊற்றி கலக்கவும். இப்போது தண்ணீர் மேலே தெறிக்க ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த முந்திரிகளை சேர்க்கவும். இதை சேர்த்த பின் கலவையை நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் கிளற வேண்டும்

இப்படி செய்யும் பொழுது பேனில் ஒட்டாமல் எல்லா மாவும் அல்வா போல நன்கு திரண்டு வரும். கோதுமை கலவை அல்வா நிறத்தில் மாறி வரும். டார்க் பிரவுன் நிறத்திற்கு வரும். அல்வா பதம் வந்தபின் அடுப்பை அணைத்து இறக்கலாம். அவ்வளவு தான் சுவையான கோதுமை அல்வா ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Wheat halwa recipe in tamil