டக்குன்னு ஒரு ஹெல்தியான டின்னர் மற்றும் ஸ்நாக்ஸ் அதுவும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி செய்து கொடுங்கள். அப்புறம் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அப்படிப்பட்ட ஒரு ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
வெங்காயம்
கேரட்
தக்காளி
மிளகாய் தூள்
மல்லி தூள்
கரம் மசாலா தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
எண்ணெய்
உப்பு
குடை மிளகாய்
உருளைக்கிழங்கு
(வீட்டில் உள்ள காய்கறிகள் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். )
முதலில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். நல்லா சாப்ட்டாக பிசைந்த பிறகு அதன் மேல் எண்ணெய் தடவி அப்படியே சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து ஸ்டஃபிங் செய்வதற்கு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி, குடை மிளகாய் மற்றும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விட வேண்டும்.
அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து கொள்ள வேண்டும். ஒரு சப்பாத்தியை எடுத்து அதன் உள்பகுதியில் செய்து வைத்துள்ள மசாலா ஸ்டப்பிங்கை வைத்து உருட்டவும். இப்போது ரோல் மாதிரி உருட்டியதை இட்லி பானையில் வைத்து வேக விடவும்.
10 நிமிடம் வெந்த பிறகு தோசை கல்லில் வைத்து சிவந்த நிறம் வரும் வரை வேக விட்டு பின்னர் எடுத்து பரிமாறலாம். இதனை கட் செய்து குழந்தைகளுக்கு சட்னியை சாஸ் மாதிரி ஊற்றி கொடுத்தால் கண்ணுக்கு கவர்ச்சியாகவும் இருக்கும். வேண்டாம் என்று சொல்லாமலும் சாப்பிட்டு விடுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“